காதல் சடுகுடு, ராஜா பட நடிகையா இது ? எப்படி இருக்காங்க பாருங்க. இவருக்கு இவ்ளோ பெரிய மகன் மற்றும் மகளா ?

0
400
- Advertisement -

அஜித் பட நடிகையின் க்யூட்டான குடும்ப புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. கோலிவுட்டில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்தை எடுத்து இருக்கிறார்கள். இந்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை ரெட் ஜெயின்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது. இப்படம் வணிக ரீதியாக வெற்றியடைந்து விட்டது என்று கூட கூறியிருந்தனர்.

- Advertisement -

விடாமுயற்சி படம்:

இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. அதன் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியானது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் படபிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் துவங்கும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

ராஜா படம்:

இப்படி அஜித் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் கடந்த 2002 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ராஜா. இந்த படத்தில் அஜித்துடன் ஜோதிகா, வடிவேலு உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்த கதாநாயகிகளில் ஒருவர் தான் பிரியங்கா திரிவேதி. இவர் தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக இருந்தார்.

-விளம்பரம்-

பிரியங்கா திரிவேதி குறித்த தகவல்:

இவர் விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி இருந்த ராஜ்ஜியம் என்ற படத்தின் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டார். அதனை தொடர்ந்து இவர் விக்ரம் நடிப்பில் வெளியான காதல் சடுகுடு, அருண் விஜய் நடிப்பில் வெளிவந்திருந்த ஜனனம் உட்பட சில தமிழ் படங்களில் நடித்திருந்தார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் பெங்காலி, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்திருந்தார். பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் உபேந்திரா ராவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பிரியங்கா திரிவேதி குடும்பம்:

இவர் கன்னடத்தில் பிரபலமான நடிகர். அதோடு சமீபத்தில் இவர் நடிப்பில் கப்ஜா என்ற படம் வெளியாகி இருந்தது. தமிழிலும் கூட இவர் சில படங்களில் நடித்திருக்கிறார். மேலும், உபேந்திரா ராவ்- பிரியங்கா திரிவேதி தம்பதிக்கு ஐஸ்வர்யா என்ற மகளும் ஆயுஷ் என்ற மகனும் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை பிரியங்கா திரிவேதி தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலருமே, 45 வயதானாலும் அஜித் பட நடிகை பிரியங்கா அழகு குறையாமல் இருக்கிறார் என்று கமெண்டுகளை பதிவிட்டும் புகைப்படத்திற்கு லைக்ஸ் குவித்தும் வருகிறார்கள்.

Advertisement