பாகிஸ்தானில் அசத்தும் தல அஜித் ! ரசிகர்கள் கொண்டாட்டம் ? தமிழில் முதல்முறை !

0
1327
ajith
- Advertisement -

அஜித் நடிக்க , மீண்டும் சிவா இயக்க மூன்றாவது மூறையாக இந்த கூட்டணி இணைய வெளிவந்த படம் விவேகம். இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் படம் சரியாக போகவில்லை.
ajith இதனால், அடுத்த படத்தினை ஹிட் கொடுத்தாக வேண்டிய நிலையில் தீவிர கதை தேடலில் உள்ளார் அஜித். ஆனால், இந்த முறையும் சிவாவுடனேயே இணையப் போவதாக அரசல் புரசலாக செய்திகள் வர, வேண்டாம் என ஒரு புறம் சொல்லி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு ஒரு அருமையான செய்தி ஒன்று வந்துள்ளது. விவேகம் படத்திற்கு அஜித்தின் முந்தைய படம் வேதாளம். இந்த படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு வட இந்திய டீவி சேனல்களில் போடப்பட்டு வருகிறது. மேலும், படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
ajith அதே போல், அந்த படத்தின் ஹிந்தி டப் பாகிஸ்தானின் டீவிக்களிலும் போடப்படட்டுள்ளது. ஹிந்தியின் டப் செய்யப்பட்டு பாகிஸ்தானில் ஒளிபரப்பப்பட்ட முதல் தமிழ் படம் வேதாளம் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Advertisement