விஸ்வாசம் இப்படிப்பட்ட கதையா..! கசிந்த தகவல் ! குஷியில் ரசிகர்கள் !

0
2003

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிக்க உள்ள அவரது 58வது படமான ‘விசுவாசம்’ ரசிகர்களின் மத்தியில் மிகுந்து எதர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படத்தை பற்றிய பல்வேறு தகவல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.அஜித் மற்றும் சிறுத்தை சிவா இணையும் 4 வது படம் விசுவாசம்.

visvasam

- Advertisement -

ஏற்கனவே கடின உழைப்பை அளித்து அஜித் நடித்த விவேகம் படம் ரசிகர்களின் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் அஜித் சிவா கூட்டணியில் மற்றும் ஒரு படமா என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.இந்த நிலையில் வரும் ஜூன் 22 ஆம் தேதி படப்பிடிப்பு ஆரம்பம் என்று எதிர்பார்க்க படுகிறது.

ஆனால் படத்தின் கதை என்னவென்று இதுவரை வெளிவராத நிலையில் தற்போது படத்தின் கதை வீரம் படம் போன்ற ஒரு குடும்பம் சம்பந்தப்பட்ட கதையாகவும், மேலும் வீரம் படத்தில் இடம்பெற்றது போன்றே படத்தில் காதல் மற்றும் காமெடி காட்சிகள் இடம்பெறும் என்று தகவல்கள் வந்துள்ளது.தற்போது இரண்டு பாடல்கள் படத்திற்காக தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வீரம் படம் போன்றே விசுவாசம் படமும் குடும்பங்கள் கண்டுகளிக்கும் வகையில் ஒரு நல்ல பேமிலி என்டெர்டைனராக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது .

-விளம்பரம்-
Advertisement