வெறும் 6 புள்ளி வித்தியாசத்தில் விஜய்யை தோற்கடித்த தல அஜித்.! எப்படி தெரியுமா..

By Ajju · 1/9/2018
தமிழ் சினிமாவில் ரஜினி மற்றும் கமல் என்பதற்கு பிறகு விஜய் மற்றும் அஜித் என்பது தான் எழுதப்பட்டதாக விதியாக இருந்து வருகிறது. இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவை பல ஆண்டுகளாக ஆதிக்கம் செய்து வருகின்றனர். அதே போல இவர்களுது படங்கள் எப்போது வெளியானாலும் அது ரசிகர்களுக்கு ஒரு திருவிழா தான். அந்த வகையில் விஜய்யின் "சர்கார்" மற்றும் அஜித்தின் "விஸ்வாசம் " ஆகிய இரண்டு படங்களும் படு மும்மரமாக தயாராகி வருகிறது. சமீபத்தில் இந்த இரண்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் வெளியாகை சமூக வலைத்தளங்களில் பல்வேறு சாதனைகளை புரிந்து வந்தது. இரண்டு படத்தின் போஸ்டர்களும் படு மாஸாக இருக்கும் நிலையில், "விஸ்வாசம் " படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தான் பாலிவுட் ரசிகர்களை மிகவும் கவர்ந்துளளது. * விஸ்வாசம்- 53% * சர்கார்- 47% சமீபத்தில் ஹிந்தி இணையதளம் ஒன்று விஜய்யின் "சர்கார் " மற்றும் அஜித்தின் "விஸ்வாசம் " ஆகிய இரண்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், எந்த போஸ்டர் மிகவும் பிடித்திருக்கிறது என்ற கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. அதில் சர்கார்- 47% பேரும் , விஸ்வாசம்- 53% பெரும் வாக்களித்துள்ளனர். வெறும் 6 % அஜித்தின் "விஸ்வாசம்" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இந்த கருத்து கணிப்பில் வென்றுள்ளது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full