படப்பிடிப்பு முடிந்தாலும் ரஸ்யாவில் இருந்து திரும்பாத அஜித் - பைக்கில் பிளான் செய்துள்ள வேர்ல்ட் டூர்.

By Rajkumar · 3/9/2021

தமிழ் சினிமாவில் தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித், நடிப்பையும் தாண்டி கார் பைக் என்றால் எவ்வளவு பிரியம் என்பது அவரது ரசிகர்கள் அறிவார்கள். காரை விட இவருக்கு பைக் தான் மிகவும் பிடித்த விஷயம். அஜித் படம் என்றாலே கார் அல்லது பைக் காட்சிகள் நிச்சயம் இடம்பிடித்துவிடும். அவ்வளவு ஏன் வலிமை படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருந்தபோது, படத்தில் ஒரு பைக் சேஸிங் காட்சி படமாக்கப்பட்டது. அந்த பைக் அஜித்துக்கு மிகவும் பிடித்து விட்டதாம்.

ஹைதராபாத் ஷெடியூல் முடிந்த பிறகு, சென்னைக்கு அந்த பைக்கிலையே தான் 650 கிலோமீட்டர் டிராவல் செய்து வந்தாராம் அஜித். அவருக்கென போடப்பட்டிருந்த விமான டிக்கெட்டை கூட கேன்சல் செய்ய சொல்லிட்டாராம் அஜித். 'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பிறகு மீண்டும் 'தல' அஜித்துடன் இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணி அமைத்திருக்கும் படம் தான் 'வலிமை'.

இதையும் பாருங்க : பேரை சொல்ல சொன்ன ஆதித்யா Vjவை கலாய்த்த வடிவேலு - வைரல் வீடியோ (இந்த மனுசன இப்படி பாத்து எத்தனை வருஷமாச்சி)

இந்த படத்தில் அஜித்துக்கு செம மாஸான போலீஸ் ரோல் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, அஜித் சில படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், இந்த படம் அவருக்கு ரொம்பவும் ஒரு ஸ்பெஷலான படமாக இருக்குமாம். 'நேர்கொண்ட பார்வை' படத்துக்கு பிறகு மீண்டும் 'தல' அஜித்துடன் இயக்குநர் ஹெச்.வினோத் கூட்டணி அமைத்திருக்கும் படம் தான் 'வலிமை'.

இந்த படத்தில் அஜித்துக்கு செம மாஸான போலீஸ் ரோல் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே, அஜித் சில படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், இந்த படம் அவருக்கு ரொம்பவும் ஒரு ஸ்பெஷலான படமாக இருக்குமாம். கடந்த சில மாதங்களுக்கு முன் தான் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் வேற மாறி பாடலும் வெளியானது.

இப்படி நிலையில் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ரஸ்யாவில் நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்புகள் நிறைவடைந்து விட்டது. ஆனால், உடனடியாக இந்தியா திரும்பாமல் ரஸ்யாவில் சில நாட்கள் தங்கி பைக் மூலம் சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறாராம். மேலும், இந்த பயணத்தில் நடிகர் அஜித் 5000 கிலோ மீட்டர் பயணம் செய்ய இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full