தமிழ் சினிமா உலகில் பல ஆண்டுகாலமாக காமெடி ஜாம்பவானாக திகழ்ந்து கொண்டு இருப்பவர் வைகைப்புயல் வடிவேலு. இவரின் படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும்,வசூலையும் பெற்று தந்து உள்ளது. சில காலமாக இவர் சினிமா உலகில் இருந்து விலகி இருந்தாலும் சோசியல் மீடியாவில் இவரின் புகைப்படம் இல்லாத மீம்ஸ்களே இல்லை. அந்த அளவிற்கு வடிவேலு அவர்கள் தனெக்கென ஒரு ரசிகர் படையை திரட்டி வைத்து உள்ளார். மேலும், இவரின் 23ம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார்.
இந்த படம் பிரச்சனை காரணமாக ஷங்கருக்கும் வடிவேலுக்கும் நிறைய வாக்குவாதம் ஏற்பட்டது படம் நின்றது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதனால் இவர் சில காலம் சினிமா துறையிலிருந்து விலகியிருந்தார். இந்த நிலையில் தற்போது இவர் நீண்ட வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக படத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் சங்கருக்கும்,வடிவேலுக்கும் இடையே இருந்த பிரச்சனை சுமூகமாக முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இதையும் பாருங்க : விஜய் அங்களுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட போட்டோ குறித்த ரகசியம் சொன்ன பிந்து.
மேலும், சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர்’ என்ற படத்தில் வடிவேலு நடிக்கிறார். சமீபத்தில் இந்த படம் குறித்து அவரே சொல்லியிருந்தார். வடிவேலு. ‘தலைநகரம்’ படத்தில் அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயரான ‘நாய் சேகர்’ என்பதையே இப்படத்துக்கு டைட்டிலாக வைத்துள்ளனர். வடிவேலு நீண்ட காலத்துக்கு பிறகு இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏப்ரல் 14-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதோடு இந்த படம் தொடர்பாக பல ரசிகர்களையும், திரைப்பிரபலங்களையும் வடிவேலு சந்தித்து வருகின்றார்.
அந்த விதத்தில் சமீபத்தில் நடிகை மற்றும் சின்னத்திரை தொகுப்பாளர் அகல்யா வெங்கடேசன் அவர்கள் வடிவேலுவை சந்தித்துள்ளார். அப்போது அகல்யா வடிவேலுவை பார்த்து ‘ஒருமுறை என் பெயரைக் கூறுங்கள்’ என்று கேட்டுள்ளார். வடிவேலு அவர்கள் தனக்கு உரிய ஸ்டைலில் கலாய்க்கும் படி அவர் பெயரை கூப்பிட்டார். தற்போது அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை ரசிகர்கள் பயங்கரமாக டிரண்டிங் செய்து வருகிறார்கள்.