அஜித்தை தொட்டு பேசாதீங்க.! தயாரிப்பாளர் சந்தித்த சங்கடம்.! அஜித் என்ன செய்தார் பாருங்க.!

0
71308
Ajith
- Advertisement -

தென்னிந்திய திரைப்பட உலகில் மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் “அல்டிமேட் ஸ்டார் அஜித்”.எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், யாருடைய உதவியும் இல்லாமல் தமிழ்த் திரையுலகில் நுழைந்து தன்னுடைய கடின உழைப்பால் இந்த அளவிற்கு முன்னேறி தன்னுடைய நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் உருவாக்கியவர் தான் அஜித் அவர்கள். ரசிகர்கள் இவரை “தல” என்றுதான் செல்லமாக அழைப்பார்கள். இவர் சினிமா துறையில் தெலுங்கு திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் தான் முதன் முதலாக அறிமுகமானார். பின்னர் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவராக மாறினார்.

-விளம்பரம்-
Image result for rajavin parvaiyile

அஜித்துக்கு அதிகமாக கார் பந்தயத்திலும்,பைக் பந்தயத்திலும் தான் அதிக ஆர்வம் உடையவர். மேலும், இவர் அதிக பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றியும் பெற்றுள்ளார். சர்வதேச அளவில் நடக்கும் விழாக்களில் பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளார்.இந்நிலையில் இந்த வருடம் மட்டும் இவருடைய நடிப்பில் வெளிவந்த “விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை” படங்கள் திரையரங்குகளில் தெறிக்க விட்டது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு பிளாக் பஸ்டர் படமாக ஓடியது. இந்த இரண்டு படங்களும் மக்களிடையேயும், ரசிகர்களிடையேயும் அதிக வரவேற்பையும், வசூலையும் பெற்றுத்தந்தது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து அஜித் அவர்கள் எப்போதுமே பழைய விஷயங்களை மறக்க மாட்டார் என்பதற்கு சமீபத்தில் நடந்த தகவல் ஒன்று போதும்.அது சமீபத்தில் நடந்த பேட்டியில் தயாரிப்பாளர் சவுந்தர் அவர்கள் அஜித் குறித்து கூறியது, அஜித் விஜய் ஆகிய இருவரும் இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தின் தயாரிப்பாளர் சவுந்தர்.சவுந்தர் சமீபத்தில் நடந்த ஒரு போராட்ட கூட்டத்தில் அஜித்தை பார்த்தார். அப்போது அஜித்தை சந்தித்த ஒருவர் அவரைத் தொட்டுப் பேசக்கூடாது என்று கூறினார். இதையும் ஏற்றுக்கொண்டு சௌந்தர் அவர் கூறியது போல தள்ளி நின்றே பேசினார்.

ஆனால், அஜித் அவர்கள் அவரைப் பார்த்ததும் கட்டிப்பிடித்து நல்லா இருக்குறீங்களா! என்று நலம் விசாரித்தார்.சவுந்தருக்கு என்ன? செய்வது என்று புரியாமல் திகைத்துப்போய் நின்றார். அப்போதுதான் அவர் நினைத்தார் எந்த அளவிற்கு உயரத்திற்கு சென்றாலும் அஜித் தன்னுடைய வாழ்வின் பழைய விஷயங்களை என்றும் மறக்க மாட்டார் மற்றும் நட்பு மாறாது நட்பின் இலக்கணமாய் இருந்து வருகிறார் என்று சவுந்தர் கூறியுள்ளார்.மேலும்,அஜித் அவர்களின் நடிப்பில் “தல 60” படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது என்று இணையதளங்களில் அவரின் போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் ஜெட் வேகத்தில் வெளியானது. இதனால் தல ரசிகர்கள் உற்சாகத்தில், ஆர்ப்பாட்டத்திலும் இருக்கிறார்கள் என்ற தகவல் வெளிவந்தது.

-விளம்பரம்-
Image result for rajavin parvaiyile producer

அஜித்தின் அடுத்த படமான தல 60 படத்திலும் தயாரிப்பாளர் போனி கபூர் , இயக்குனர் வினோத் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அஜித் அவர்கள் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகியுள்ளார் என்ற தகவலும் வெளிவந்தது.மேலும், இந்த படத்தில் தல அஜீத் செம்ம மாஸாக இருக்க போகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், இந்த படத்திற்காக அவர் அதிக உடற்பயிற்சி எடுத்து பிட்னஸ் ஆக இருக்கிறார் என்ற தகவலும் பரவி வருகிறது. மேலும், அவருடைய இந்த புதிய பிட்னஸ் லுக்கை பார்க்க ரசிகர்கள் வெறித்தனமாக உள்ளனர் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement