அஜித்தின் ராஜா பட நடிகை இந்த பிரபல நடிகரின் மனைவியா? இப்போ எப்படி இருக்கார் பாருங்க ?

0
118436
Priyanka trivedi
- Advertisement -

தமிழில் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான ராஜ்யம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா திரிவேதி. இந்த படத்தில் விஜயகாந்தின் தம்பியாக பிரபல மலையாள நடிகர் மனோஜ் குமார் நடித்து இருந்தார். அவரின் காதலியாக இந்த படத்தில் நடித்தவர் தான் நடிகை பிரியங்கா திரிவேதி.

-விளம்பரம்-

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பூர்வீகமாக கொண்ட இவர் முதன் முதலில் அறிமுகமானது 1998 ஆம் ஆண்டு வெளியான ஒரு பெங்காலி படத்தின் மூலம்தான். அதன் பின்னர் ஹிந்தி ஒடிசா தெலுங்கு கன்னடா போன்ற பல மொழிகளில் நடித்து வந்தார். அதன் பின்னர் ராஜியம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

- Advertisement -

ராஜ்ஜியம் படத்தில் நடித்த அடுத்த படத்திலேயே அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்த ராஜா திரைப்படத்தில் அஜித்தின் ஜோடியாக இவருக்கு வாய்ப்பு கிடைத்தது, அதன் பின்னர் விக்ரம் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான காதல் சடுகுடு படத்திலும் நடித்திருந்தார், அதன்பின்னர் இவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை என்றாலும் ஐஸ், ஜனனம் போன்ற தமிழ் படங்களில் நடித்து வந்தார் பிரியங்கா.

View this post on Instagram

Back at it. @jfit47 #fitness #staymotivated

A post shared by priyanka upendra (@priyanka_upendra) on

சினிமாவில் சற்று வாய்ப்பு குறையவே பிரியங்கா திருமணம் செய்து கொண்டார். இவர் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் நடிகரான உபேந்திராவை கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார், திருமணத்திற்கு பின்னரும் கன்னடம் மற்றும் பெங்காலி படங்களில் நடித்து வந்தார், பிரியங்காவிற்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கிறது,

-விளம்பரம்-
Advertisement