அஜித்துடன் நடித்த முதல் படமே பிளாப் – முதல் படத்தோடு காணாமல் போன ரெட் பட நடிகை என்ன ஆனார் தெரியுமா ?

0
3205
PriyaGill
- Advertisement -

சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்த பல்வேறு நடிகைகள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்னவானார்கள் என்ற விவரம் தெரியாமலேயே போய்விடுகிறார்கள். அந்தவகையில் தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியான ரெட் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த நடிகையை தமிழ் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். முதல்படமே அஜித்துடன் நடித்த நடிகை தற்போது எங்கே இருக்கிறார் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது பலரும் அறிந்திராத ஒரு விஷயம் அவரைப்பற்றிய ஒரு தொகுப்பே இந்த பதிவு.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-133.jpg

ரெட் படத்தில் நடித்த நடிகையின் பெயர் பிரியா கில், மாடல் அழகியான இவர் இந்தியில் 1996 ஆம் ஆண்டு வெளியான ‘தேரி மேரா சப்னா’ என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் சினிமாவில் அறிமுகமான போது இவரது வயது 21, சினிமாவில் அறிமுகமான இரண்டு வருடம் கழித்து தான் இவருக்கு இரண்டாவது படத்தின் வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து இந்தி , மலையாளம், தெலுங்கு என்று பல்வேறு மொழி படங்களில் நடித்து வந்தார் பிரியா கில்.

- Advertisement -

ஹிந்தி, மலையாளம், தெலுங்கு படங்களை தொடர்ந்து இவருக்கு தமிழில் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியான ரெட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ரெட் ஒரு மாஸ் திரைப்படமாக இருந்தாலும் அஜித் வாழ்வில் ஒரு மிகப் பெரிய தோல்விப் படமாகவே அமைந்தது. இந்த திரைப்படத்திற்கு பின்னர் அவருக்கு தமிழில் வேறு எந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்கப்பெறவில்லை.

This image has an empty alt attribute; its file name is 2-33.jpg

தமிழில் ஒரே ஒரு படத்தில் அதுவும் அஜித்துடன் நடித்த பெருமையுடன் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார் நடிகை பிரியா கில். இருப்பினும் இவருக்கு பஞ்சாப், இந்தி, போஜ்புரி போன்ற படங்கள் அதன் பின்னர் கைகொடுத்தது. இறுதியாக 2006 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான பைரவி என்ற படத்தில் நடித்திருந்தார் அதன் பின்னர் இவர் ஒட்டுமொத்த சினிமா துறையில் இருந்து காணாமல் போய்விட்டார். 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு டென்மார்க்கில் செட்டில் ஆன இவர், சொந்தமாக ஒரு மாடல் நிறுவனத்தை நடத்தி வருகிறாராம்.

-விளம்பரம்-
Advertisement