salt and pepper லூக்குக்கு Bye Bye சொன்ன தல அஜித் ! விஸ்வாசத்தில் தல என்ன கெட்டப் தெரியுமா ?

By Ajju · 24/11/2017
பல எதிர்பாப்புகளுக்குப் பிறகு தல அஜித்தின் 58ஆவது படத்திற்கான அறிவிப்புகள் வெளியானது. வழக்கான தனது இயக்குனரான சிவாவே இந்த படத்தையும் இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. மேலும், இதற்கு முந்தைய படமான விவேகத்தை தயாரித்த 'சதய ஜோதி பிலிம்ஸ்' இந்த படத்தினை தயாரிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. விஸ்வாசம் என்ற நேற்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட (நவ்.23) இந்த தலைப்பினை தற்போது அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வழக்கமாக படத்தின் வேலைகள் துவங்கி பாதிக்கு மேல் சென்றதும் படத்தலைப்பினை அறிவித்து வந்த சிவா அன்ட் கோ தற்போது படம் துவங்கும் முன்னரே தலைப்பை அறிவித்துவிட்டது. அதே போல் இன்னும் படக்குழுவும், இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கிட்டத்தட்ட விவேகம் படத்தில் பணியாற்றிய டெக்ணீசியன்களே இந்த படத்திற்கு என்றாலும், ஹீரோயின் மற்றும் இசையமைப்பளரை மாற்றவுள்ளார் சிவா. இதையும் படிங்க: விஸ்வாசம் படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா ! லிஸ்டில் 3 நடிகை -கசிந்த தகவல் ? மேலும், முன்னர் தல-சிவா கூட்டணி செயத மூன்று படங்களும், தம்பி, தங்கை மற்றும் மனைவி சென்டிமென்ட்டில் வெளிவந்தது. தற்போது தயாராகவுள்ள விஸ்வாசம் குடும்ப சென்டிமென்ட்டில் உருவாகவுள்ளதாகவும் தெரிகிறது. அதே போல், பல ஆண்டுகளாக சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் கலக்கி வந்த தல தற்போது இந்த படத்திற்க்காக தலை முழுவதும் கலரிங் செய்துவிட்டு இளமையாக நடிக்கவுள்ளதாகவும் தெரிகிறது. எப்படிப் பார்த்தாலும் தல ரசிகர்களுக்கு வரும் தீபாவளி தல தீபாவளிதான்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full