இது முடிந்து மீண்டும் சிவாவுடன் கூட்டணி வேண்டாம் என தலைகீழாக நின்ற தல ரசிகர்ளுக்கு நேற்றைய அறிவிப்பு சற்று அதிர்ச்சியாகத் தான் இருந்தது. ஆம், மீண்டும் சிவா கூட்டணியில் 4ஆவது படமாக 'விஸ்வாசம்' என படத்தின் தலைப்பை வெளியிட்டது படத் தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ்.
தற்போது அதனை ஒரு வழியாக ஏற்றுக் கொண்டு படத்தின் அடுத்த அறிவிப்பிற்கு தயாராகிவிட்டனர் தல ரசிகர்கள். அவர்கள் எதிர்பார்த்தபடி படத்தின் ஹீரோயின் அறிவிப்பு அரசல் புரசலாக வந்துள்ளது.
இந்தபடத்தில் ஹீரோயினாக வீரம் பட நாயகி தமன்னா அல்லது அனுஷ்காவிற்கு வாய்ப்பு வரலாம் எனத் தெரிகிரது. அதே நேரத்தில் படம் வேறு ஹீரோயின் தான் என இருக்கும் சிவாவிற்காக கீர்த்தி சுரேசிடம் பேசலாம் எனவும் கூறப்படுகிறது.




