செல்பி கேட்ட மாணவர்கள்..!அஜித் செய்த செயல்..!வீடியோ இதோ..!
நடிகர் அஜித் நடிப்பைத் தாண்டி புகைப்படக் கலை, பைக் ரேஸ், கார் ரேஸ் போன்றவற்றில் கைதேர்ந்தவர்.சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்.ஐ.டி கேம்பஸில் பயிலும் ஏரோநாட்டிகல் மாணவர்கள் ஆளில்லா விமானங்கள் குறித்து ஆய்வு செய்ய தக்ஷா என்னும் குழுவை உருவாக்கினர்.
இந்தக் குழுவுக்கு நடிகர் அஜித் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். ஆஸ்திரேலியாவில் நடந்த `Medical Express 2018 UAV Challenge’ போட்டியில் அஜித் வழிநடத்திய தக்ஷா அணிக்கு சர்வதேசப் போட்டியில் 2-வது இடம் கிடைத்தது. இதை அவரின் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிலையில் இதே தக்ஷா குழுவின் அடுத்த ட்ரோன் தொடர்பான திட்டத்துக்காக எம்.ஐ.டி கல்லூரிக்கு வந்துள்ளார் அஜித். அப்போது அந்த மைதானத்தில் கல்லூரி மாணவர்கள். அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டனர்.எ[அப்போது அவர்களிடம், நானே வருகிறேன் என்று கூறிய அஜித் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.#ThalaAjith inspiration for an reason??? pic.twitter.com/NAtwxgDKwe
— Vetrimass (@Vetrimass9) November 12, 2018