கார் பந்தயத்தில் அஜித்தோட சீனியர் இவர் தானாம்.! பார்த்தா நம்பமாடீங்க.!

By ·

தமிழ் சினிமாவில் தல என்று அழைக்கப்படும் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் ஒரு கார் பிரியர் என்பதைவிட கார் வெறியர் என்றே கூறலாம். சினிமாவில் நடிக்கவருவதற்கு முன்பாக பார்முலா கார் ரெஸர் பந்தயங்களில் பங்கேற்றுள்ளார் நடிகர் அஜித் குமார்.  

அஜித் ஒரு கார் பிரியர் என்பதால் அவரது படத்திலும் கார் அல்லது பைக் ஓட்டும் மாஸ் காட்சிகள் கண்டிப்பாக இடம்பெற்று விடும். நடிகர் அஜித்தை போல வேறு யாராலும் கார் ஓட்ட முடியாது என்று அஜித்தின் நெருங்கிய நண்பர்கள் பல பேர் கூறி நாம் கேட்டுளோம்.

இதையும் படியுங்க : படப்பிடிப்பிற்கு சென்று அஜித்தை நேரில் சந்தித்த ஷாலினி.! வைரலாகும் புகைப்படம்.!

அதே போல அஜித் வீட்டின் கராஜில் பல வகையான பைக் மற்றும் கார் நின்றுகொண்டிருக்கும். இந்த நிலையில் அஜித் கார் பந்தயத்தில் ஈடுபட்ட போது நான் தான் அவருடைய சீனியர் என்று பிரபல அரசியல் பிரமுகரான வெற்றிவேல் கூறியுள்ளார்.

அதிமுக கட்சியில் பல ஆண்டுகளாக இருந்த வெற்றிவேல் தற்போது தினகரன் கட்சியில் இருந்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வெற்றிவேல் பேசுகையில், அஜித் எனக்கு ஜூனியர் ஆவார். அவர் கார் ரேஸில் ஈடுபட்டபோது நான் அவருக்கு சீனியராக இருந்து உள்ளேன். நான் இருந்தபோதே அவர் சாம்பியனாக இருந்தார். அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர் மேலும், சிறந்த மனிதர். அவரைப் போன்ற ஒரு மாஸ் ஹீரோவை அரசியலுக்கு வரவைக்க எண்ணமில்லை என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full