நடிகர் அஜித் காலில் ஷாலினி விழுந்து இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா பிரபலங்களில் எவ்வோளவோ புதிது புதிதாக தம்பதியர்கள் வந்தாலும் முதலில் அனைவருக்கும் மனதில் தோன்றுவது அஜித்- ஷாலினி ஜோடி தான். திருமணத்திற்கு பின்னர் ஷாலினி நடிப்பை விட்டு குடும்பத்தை கவனித்து வருகிறார். கடைசியாக இவர் பிரியாத வரம் வேண்டும் என்ற படத்தில் தான் நடித்திருந்தார்.

அமர்க்களம் படத்தின் போது தான் இவர்கள் இடையே காதல் மலர்ந்தது. 1999 ஆம் ஆண்டு சரண் இயக்கத்தில் வெளிவந்த படம் அமர்க்களம். இந்த படத்தில் தான் ஷாலினியும் அஜித்தும் இணைந்து ஜோடியாக நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவருடைய காதல் கதை தமிழ்நாடே அறிந்தது தான். திருமணத்திற்கு பின்னர் அஜித் – ஷாலினி தம்பதியருக்கு அனோஸ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள்.
அஜித்-ஷாலினி:
அமர்க்களம் படத்தின் போது தொடங்கிய இவர்கள் காதல் இன்று வரை எந்த ஒரு சர்ச்சையிலுமே சிக்காமல் இருக்கிறார்கள். அஜித் தன்னுடைய கேரியருக்கு இணையாக தன்னுடைய குடும்பத்திற்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். மேலும், சோசியல் மீடியாவில் அஜித் பெரிய அளவில் ஆக்டிவாக இல்லை என்றாலும் ஷாலினி அடிக்கடி அவர்களுடைய வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
View this post on Instagram
அஜித் வீடியோ:
இந்த நிலையில் அஜித் தன்னுடைய காலில் விழுந்திருக்கும் வீடியோவை தான் ஷாலினி பகிர்ந்து இருக்கிறார். அதாவது, தன் கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்று வரலட்சுமி நோன்பு பூஜையில் ஷாலினி கலந்துகொண்டு இருந்தார். பின் தன்னுடைய கணவர் அஜித்குமார் காலில் விழுந்து ஷாலினி ஆசிர்வாதம் வாங்கி இருந்தார். அப்போது அஜித், வீட்டில் போய் நான் காலில் விழ வேண்டும் என்று வேடிக்கையாக பேசுகிறார். தற்போது இது தொடர்பான வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

அஜித் குறித்த தகவல்:
தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் வெளியாகி இருந்த குட் பேட் அக்லி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வசூல் செய்தது.

அஜித் திரைப்பயணம்:
இதை அடுத்து அஜித் அவர்கள் சினிமா, கார் ரேஸ் என்று பிசியாக இருக்கிறார். அதோடு அஜித்தின் அடுத்த படம் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சினிமாவில் நுழைந்து 33 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அஜித் அவர்கள் சில தினங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.






