போரடித்து போன ரைபிள் - துப்பாக்கி சுடும் பயிற்சயில் அடுத்த லெவலுக்கு சென்றுள்ள அஜித். இதோ புகைப்படம்.

By Rajkumar · 21/2/2021

தமிழ் சினிமாவில் மிக உச்சத்தில் இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர்தான் நம்ம "தல அஜித்". மேலும்,இவரை திரையுலகம் அல்டிமேட் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள். இவர் நடிப்பில் மட்டும் இல்லாமல் பல துறைகளில் சாதனை புரிந்து வருகிறார். நம்ம தல அஜித் அவர்கள் சினிமா துறையில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். அதிலும் 2019 ஆம் வருடம் வெளிவந்த நேர்கொண்டபார்வை ,விஸ்வாசம் படம் பட்டையை கிளப்பியது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு மெகா ஹிட் படங்களாக அமைந்தது. இதனை தொடர்ந்து அஜித் அவர்கள் வலிமை படத்தில் நடித்து உள்ளார்.

இப்படி ஒரு நிலையில் நடிகர் அஜித் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.சென்னை பழைய கமிஷனர் அலுவலகத்தில் உள்ள ரைபிள் கிளப்பிற்கு செல்ல வேண்டிய பாதை மாறி புதிய கமிஷனர் அலுவலகம் வந்தார். கமிஷனர் அலுவலகத்துக்குள் அஜித் நுழைந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்ததோடு ரைபிள் கிளப்பிற்கு வழி கூறி அனுப்பி வைத்தனர்.

இதையும் பாருங்க : தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை - கலைமாமணி விருதை தாயிடம் கொடுத்து காலில் விழுந்த எஸ் கே. மனதை கவர்ந்த புகைப்படம்.

அஜித் குமார் அவர்கள் நடிப்பில் மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி சாதனை புரிந்தும் வருகிறார்.அஜித் அவர்கள் இளம் வயதிலேயே கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஆர்வம் உடையவர். அதே போல பல விதமான பொழுது போக்கில் ஈடுபட்டு வரும் அஜித் அதை கூட சீரியஸாக எடுத்துக்கொண்டு தான் பயிற்சி செய்வார். அந்த வகையில் துப்பாக்கி சுடுதல் துறையில் சாதிக்க வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருகிறார்.

இந்த துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட தான் ரைபிள் கிளப்பிற்கு சென்றார் அஜித். ஆனால், இந்த முறை ரைபிளை விடுத்து ஷார்ட் கன் மற்றும் டவுள் பேரல் துப்பாக்கி பயிற்சயில் ஈடுபட்டு வருகிறார் அஜித். கோவையில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டுஇருந்தார் . மேலும் டெல்லியில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டு இருந்தார். அது மட்டும்இல்லாமல் டெல்லியில் நடந்த துப்பாக்கி போட்டியில் டாப் 10 இடங்களில் வந்தார் அஜித் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full