தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை – கலைமாமணி விருதை தாயிடம் கொடுத்து காலில் விழுந்த எஸ் கே. மனதை கவர்ந்த புகைப்படம்.

0
466
sk

தமிழ் நாட்டில் கலை மற்றும் பண்பாட்டின் வளர்ச்சிக்கும், தொன்மையாக கலை வடிவங்களை பாதுகாக்கவும் உதவும் கலைஞர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் கடந்த 1954-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருது தமிழ் சினிமாவில் தற்போதுள்ள முன்னணி நடிகர்கள் பலருக்கு வழங்கப்பட்டது.

அந்த வகையில் இந்த ஆண்டு காலைமாமணி விருது பெரும் கலைஞர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியானது. இதில் பழம்பெறும் நடிகைகளான, சரோஜா தேவி, சவுகார் ஜானகி, பாடகி ஜமுனா ராணி, நடிகர் ராமராஜன், தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக வலம வரும் சிவகார்த்திகேயன், முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தயாரிப்பார் ஐயரி கணேஷ், மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையும் பாருங்க : முகவரி படத்தில் 4 நாட்கள் நடித்த விஜய் பட ஹீரோயின் – பாதியிலேயே தூக்கிய இயக்குனர். காரணம் இது தானாம்.

- Advertisement -

நடிகர்களில் : ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு ஆகியோருக்கும் நடிகைகளில் : சரோஜாதேவி, சவுகார் ஜானகி, சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா ஆகியோர்களுக்கும். இசையமைப்பாளர்களில் : டி இமான், தீனா,  பாடகர்கள் சுஜாதா, அனந்து ஆகியோர்களுக்கும். இயக்குனர்களில் : கவுதம் மேனன், லியாகத் அலி கான், மனோஜ் குமார், ரவி மரியா ஆகியோர்களுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரு நிலையில் கலைமாமணி விருது பெற்ற சிவகார்த்திகேயன் தனது அம்மாவின் காலில் விழுந்து வாங்கி இருக்கிறார். அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன், சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும்,இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி. தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம்

-விளம்பரம்-
Advertisement