நாடு முழுவதும் கொரோனாவின் ஆட்டம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. இன்னும் இந்த கொரோனா வைரசுக்கு மருந்து எதுவும் கண்டுபிடிக்கவில்லை. இதனால் மக்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துக் கொண்டு வருகிறது.தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகி வருகிறது.இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஆளில்லா விமானம் மூலம் கிருமிநாசினி தெளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சியின் சார்பில் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க 200 வார்டுகளிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்க பவர் பிரையர் உட்பட 500 இயந்திரங்களை பயன்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசு அலுவலர்கள் உட்பட பெரிய பெரிய கட்டிடங்களில் 75 ஜெட்ராடிங் எந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

இந்த எந்திரம் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தால் உருவாக்கப்பட்டது. இந்த எந்திரத்தின் மூலம் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கிருமிநாசினி தெளிக்க இயலும். இதுபோன்று அண்ணா பல்கலைக் கழகத்திடம் நான்கு ட்ரோன் எந்திரங்கள் உள்ளன என்று மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த ட்ரோன் கண்டுபிடித்தலில் நம்ப தல அஜித் பங்கும் உள்ளது.

இதுகுறித்து தக்ஷா குழுவின் செந்தில் குமார் என்பவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில்,அஜித்துக்கு இந்த குழுவுக்கு என்ன சம்மந்தம் என்று கேட்கப்பட்டதர்க்கு, எங்கள் டீம் தக்ஷாவிற்கு நிறைய உதவிகளை செய்திருக்கார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் அவர் எங்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார். எங்கள் குழுவில் அவர் இப்போதும் இருக்கிறார். தேவைபட்டால் அவரின் உதவியை கேட்போம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement