தமிழ் நடிகரின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள போகும் அஜித்.! அதற்கு காரணமும் இருக்கிறது.

0
848
Ajith
- Advertisement -

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகர் ஆர்யா, ஆர்யா -சயிஷா திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. வனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய்ஷா. இவர், ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது

-விளம்பரம்-

ஆரம்பத்தில் ஆர்யாவை, சயிஷாவிற்கு திருமணம் செய்து வைக்க ஷாயிசாவின் அம்மாவிற்கு விருப்பமில்லை என்ற ஒரு செய்தியும் வெளியாகி இருந்தது. ஆனால், அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் இவர்கள் இருவரின் திருமணத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். மேலும் , இவர்களது திருமணம் வரவேற்பு சாயிஷாவின் சொந்த ஊரான ஹைதராபாத்தில் நடைபெற்றது.

- Advertisement -

இந்த நிலையில் கடந்த (மார்ச் 8) இவர்களின் திருமண வரவேற்பு மிகவும் சிம்பிளாக நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பில் இருவீட்டாரின் நெருங்கிய சொந்தங்கள் மற்றும் ஒருசில பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த திருமண வரவேற்பில் எதிர்பார்த்தபடி எந்த ஒரு பெரிய நடிகர்களும் கலந்துகொள்ளவில்லை.

இந்த நிலையில் இவர்கள் இருவரது திருமண வரவேற்பு இன்று நடைபெற இருக்கிறது. இந்த திருமண வரவேற்பில் அஜித் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்க படுகிறது. பொதுவாக அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சிக்கியிலும் பங்குபெறுவது இல்லை. ஆனால், நடிகர் ஆர்யா. அஜித் நடித்த ‘ஆரம்பம் ‘ படத்தில் நடித்துள்ளார். எனவே, நட்புரீதியாக ஆர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

-விளம்பரம்-
Advertisement