நயன்தாராவா, கீர்த்தியா.. தலையின் ‘வலிமை’ படத்தில் கதாநாயகி யார் ?

0
1836
ajith-60
- Advertisement -

தமிழ் திரைப்பட உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக கலக்கி கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார். அவரின் ரசிகர்கள் எல்லோரும் அவரை செல்லமாக ” தல” என்றுதான் அழைப்பார்கள். மேலும், திரையுலகினர் அவரை “அல்டிமேட் ஸ்டார்” என்றும் அழைப்பார்கள். மேலும், அஜித்குமாருக்கு என்றே ஒரு தனி ரசிகர் படையே உள்ளது என்று சொன்னால் மிகையாகாது. இயக்குனர் வினோத் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் தயாரிப்பாளர் போனிகபூர் கூட்டணியில் , அஜித் நடிப்பில் வெளியான “நேர்கொண்டபார்வை” படம் மக்களிடையே அதிக வரவேற்பையும், ஆதரவையும் பெற்று வெற்றிகரமாக ஓடியது. அதுமட்டும் இல்லைங்க இந்த படம் வசூல் ராஜாவாக திகழ்ந்து. இந்த வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் கூட்டணியில் அஜீத் குமார் நடிப்பில் ‘தல 60’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது என இணையங்களில் தெரிவித்தார்கள். இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Image

இந்த திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட கதைக்களமாக கொண்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் அஜீத் குமார் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளன. அஜித் குமார் அவர்கள் பைக் ரேஸ், கார் ரேஸ் ஆகியவற்றில் அதிகம் ஆர்வம் உடையவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்தவகையில் அவருடைய எல்லா படத்திலும் ஒரு காட்சியிலாவது அவருடைய பைக் ரேஸ் சம்பந்தமான காட்சிகள் எடுக்கப்படும். இந்நிலையில் தற்போது வெளியான நேர்கொண்ட பார்வை படத்திலும் நடந்த ஸ்டன்ட் ரேஸ் காட்சிகளில் டூப் போடாமல் தலயே நடித்துள்ளார் என்பதும் தெரிய வந்தது . இதனை தொடர்ந்து இந்த தல 60 படத்திலும் ஆக்ஷன் காட்சிகள், அவருடைய பைக் ரேஸ் காட்சிகள் இருக்கும் என தல ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

இதையும் பாருங்க : விஜய், விக்ரம் படத்தில் மிரட்டிய சொர்ணாக்காவை ஞாபம் இருக்கா ? அவர் என்னவானார் ?

- Advertisement -

மேலும், இந்த தல 60 வது படத்திலும் இவர்கள் மீண்டும் கூட்டணி சேர்ந்து உள்ளார்கள். இந்த படத்தில் அஜித் அவர்கள் தீவிரமாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ரொம்ப ஸ்லிம்மா மாறி இருக்கிறார் என்ற தகவலும் வந்துள்ளது. மேலும், அவருடைய லுக் பார்ப்பதற்கு வேற லெவெல்ல இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். அது மட்டும் இல்லைங்க இந்த படத்தில் நம்ம அஜித் அவர்கள் பழையபடி கருமையான முடி வைத்து உள்ளார் என்றும் கூறுகிறார்கள். அதோடு இந்த படத்தில் அஜித்துடன் நடிக்க பல நடிகைகளை தேர்வு செய்தும் வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்தது. இது ஒரு பக்கம் இருந்தாலும் போனி கபூரின் தயாரிப்பில் ‘மைதான்’ என்ற படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் நடித்து வருகிறார்.

Image
Image

இந்த நிலையில் ‘தல 60’ படத்திலும் அவர் நடிக்க வாய்ப்புகள் நிறைய இருப்பதாகவும் கூறி வருகின்றார்கள். இதனை தொடர்ந்து நாளை காலை தல 60 படத்திற்கான பூஜைகள் நடைபெற உள்ளது என டுவிட்டரில் பலரும் தகவல் கூறி வருகின்றனர். அது மட்டும் இல்லைங்க சென்னையில் உள்ள போனி கபூரின் வீட்டிலேயே படத்திற்கான பூஜை நடைபெற உள்ளது என்றும், இதில் நம்ம தல அஜித் கலந்து கொள்கிறார் என்றும் கூறுகிறார்கள். ஆகவே விரைவில் தல 60 படத்திற்கு உரிய தகவல்களை அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement