அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இரண்டு வருட காத்திருப்புக்கு பிறகு வலிமை படம் கடந்த மாதம் ரிலீசானது. இயக்குனர் வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி இருக்கிறார். இதையும் போனிகபூரே தயாரித்து உள்ளார். இந்த படத்தில் ஹூமா குரேஷி, கார்த்திகேயா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். படத்தில் அஜித் அவர்கள் அசிஸ்டன்ட் கமிஷனராக உள்ளார். சென்னையில் Satan Slave குழுவை சேர்ந்த இளைஞர்கள் பைக்கை வைத்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடுகின்றார்கள்.

இதை அஜித் கண்டுபிடித்து அந்த கூட்டத்தின் தலைவரை பிடிக்கிறார். இந்த குழுவில் அஜித்தின் தம்பியும் இருப்பது தெரிகிறது. இதையெல்லாம் அஜித் எப்படி சமாளித்து வருகிறார்? என்பது படத்தின் மீதி கதை. மேலும், படம் முழுவதும் அஜித்தின் ஸ்டண்ட் காட்சிகளும் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. படத்தை பார்த்து திரை உலக பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை அஜித்துக்கும், வலிமை படக் குழுவினர்களுக்கும் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் வலிமை திரைப்படம் தமிழகத்தில் இதுவரை 900க்கும் மேல் திரையரங்களில் வெளியாகி உள்ளது.
வலிமை படம் பற்றிய தகவல்:
தமிழ் சினிமா வரலாற்றில் 100 வருட சாதனையை வலிமை செய்து இருக்கிறது என்று கூறப்படுகிறது. மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்று வருகிறது. இருந்தாலும் சிலர் படம் குறித்து சொல்லும் நெகட்டிவ் கமெண்ட்ஸ் வலிமை படத்தின் வசூலை பாதிக்கிறது என்று கூறப்படுகிறது. தற்போது வரையிலான மொத்த வசூல் 200 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வலிமை திரைப்படம் குறித்த பல சர்ச்சையான செய்திகள் சோசியல் மீடியாவில் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
https://twitter.com/nihtiestamilkid/status/1502264384349171715?t=a3Jli99Fb10UH3dThJTD1Q&s=19

வலிமை படம் குறித்து வரும் சர்ச்சை:
சமீபத்தில் கூட வலிமை படக்குழுவினர் மீது மெட்ரோ பட இயக்குனர் தனது படம் இது, என்னுடைய படத்தின் கதை என்று வழக்கு தொடர்ந்திருந்தார். பின் வலிமை படம் வால்டர் வெற்றிவேல் கதையை திருடியது என்று ப்ளூ சட்டை மாறன் விமர்சித்தும் அஜித்தை உருவ கேலியும் செய்து இருந்தார். இது எல்லாம் சோசியல் மீடியாவில் பயங்கர பேசு பொருளாக இருந்தது. இப்படி இருக்கும் நிலையில் தற்போது வலிமை படத்தின் ஒரு காட்சியை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
வலிமை பட காட்சியை விமர்சிக்கும் நெட்டிசன்கள்:
அது என்னவென்றால், படத்தில் ஒரு காட்சியில் அஜீத் காரில் இருந்து இறங்கி நடந்து வருவது போல இருக்கும். அதில் காலை முதலில் வெளியே காண்பித்துவிட்டு பின் மீண்டும் கதவுகள் மூடி இருக்கும். இதனை கண்டுபிடித்த நெட்டிசன்கள் என்னடா பண்ணிட்டு இருக்கீங்க? என்றும், இவ்வளவு அலட்சியமாக படமெடுப்பதா? என்றும் இயக்குனரை விமர்சித்துள்ளனர். தற்போது இந்த காட்சி குறித்த விமர்சனம் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது.

ஏகே 61 படம் பற்றிய தகவல்:
மேலும், வலிமை படத்தை தொடர்ந்து இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். இந்த படத்தில் படத்தில் ஹீரோயினாக தபு கமிட் செய்திருக்கிறார்கள். இந்த படம் ஐந்து மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கின்றனர். அதோடு இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச்சில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் திட்டமிட்டிருக்கிறார்கள். அப்படியே இந்த படத்திற்கான பிற நடிகர்களின் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றது. இப்படி தொடர்ந்து அஜித்தின் ஏகே 61 படம் பற்றிய அப்டேட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.





