10வது முறையாக V செண்டிமெண்ட, விடாமுயற்சி படத்தின் கதை இதுவா ? இப்போதே Decoding

0
1452
- Advertisement -

அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகே 62 படத்தின் தலைப்பு போஸ்டர் வெளியாகி இருப்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கோலிவுட்டில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் திரைப்படங்களில் மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை படம் ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு இருந்தது. வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் துணிவு படத்தை எடுத்து இருக்கிறார்கள். இந்த துணிவு திரைப்படம் கடந்த மாதம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது.

- Advertisement -

துணிவு படம்:

இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தை ரெட் ஜெயின்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது. இப்படம் வணிக ரீதியாக வெற்றியடைந்து விட்டது என்று கூட கூறியிருந்தனர். அதோடு இந்த படம் தமிழகத்தில் மட்டும் 135 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார்.

ஏகே 62 படம்:

இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. அதன் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியானது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். மேலும், விக்னேஷ் சிவன் படத்திலிருந்து விலகியத்தை குறித்து சோசியல் மீடியாவில் பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

-விளம்பரம்-

விக்னேஷ் சிவன் அளித்த பேட்டி:

அதற்கு விக்னேஷ் சிவன், நான் சொன்ன கதையின் இரண்டாம் பாதி தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் கதையை மாற்ற சொன்னார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் இந்த படத்தில் இருந்து விலகி கொண்டேன். அதோடு கதையை மாற்ற சொல்லி அஜித் எதுவும் கூறவில்லை என்று கூறி இருந்தார். இந்நிலையில் அஜித்தின் ஏகே 62 படத்தின் அப்டேட் குறித்த தகவல் வைரலாகி வருகிறது. தற்போது அஜித் அவர்கள் பைக்கில் உலக சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தினுடைய டைட்டில் போஸ்ட்டர் வெளியாகி இருக்கிறது.

விடாமுயற்சி படம்:

அதில் அஜித் நடிக்கும் ஏகே 62 படத்திற்கு விடா முயற்சி என்று பெயரிடப்படுகிறது. வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம், வலிமை போன்ற படங்களை தொடர்ந்து தற்போது இந்த படத்திற்கும் வி எழுத்திலேயே தலைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. அஜித்தின் திரைப்பட வரிசையில் V என்ற வார்த்தை துவங்கும் டைட்டிலில் இது 10வது முறை. அதுமட்டுமில்லாமல் இந்த போஸ்டரில் விடாமுயற்சி என்ற தலைப்பில் ற் எழுத்துக்கு மேல் மேப்பில் உள்ள அடையாளக் குறி இருக்கிறது. இதனால் இந்த படம் பயணம் சார்ந்த கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். அது மட்டும் இல்லாமல் போஸ்டரில் சுழல் இடம் பெற்று இருப்பதால் ஒரு கப்பல் பயணத்தை அடிப்படையாகக் கொண்டு கதை உருவாக்கலாம் என்று கூறப்படுகிறது.

Advertisement