சீறிப் பாயும் ஸ்டன்ட் காட்சிகள், கூட கொஞ்சம் எமோஷன்ஸ் – விடாமுயற்சி அப்டேட்

0
645
- Advertisement -

அஜித்தின் விடாமுயற்சி படம் குறித்த புதிய அப்டேட் தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது கடுமையான உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் ஜொலித்து கொண்டு இருப்பவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான படம் துணிவு. இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கி இருந்தார். இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது.
அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது.

- Advertisement -

விடாமுயற்சி படம்:

அதன் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு விடா முயற்சி என்று பெயரிடப்படுகிறது. மேலும், விடாமுயற்சி என்ற தலைப்பில் ற் எழுத்துக்கு மேல் மேப்பில் உள்ள அடையாளக் குறி இருக்கிறது. இதனால் இந்த படம் பயணம் சார்ந்த கதையாக இருக்கும் படம் ரசிகர்கள் கூறுகின்றனர்.

படம் குறித்த தகவல்:

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். இந்த படத்தில் சஞ்சய் தத், ஆரவ், அர்ஜுன் தாஸ், அருண் விஜய், ரெஜினா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையாக இருப்பதாகவும், சில இடங்களில் எமோஷன் காட்சிகளும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தினுடைய முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

மிலன் இறப்பு:

ஆனால், கடந்த மாதம் இந்த படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் இறந்து விட்டார். இவருடைய இழப்பு அஜித் உட்பட பலரையும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. எல்லோரும் படப்பிடிப்பு நின்று விடும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு மும்முறமாக நடைபெற்று வருகிறது. மேலும் இவருடைய மனைவி மரியா மிலன். இவர் விடாமுயற்சி படத்திலும் வேலை செய்திருந்தார்.

விடாமுயற்சி அப்டேட்:

மேலும், அஜர்பைஜான் நாட்டில் தொடர்ந்து ஐம்பது நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சின்ன பிரேக் எடுத்த பிறகு படக்குழு சென்னை திரும்ப இருப்பதால் முழுமூச்சுடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பயங்கரமான ஸ்டண்ட் காட்சிகளும், சேசிங் சீன்களும் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு வலிமை படப்பிடிப்பும் தீபாவளி அன்று ஹைதராபாத்தில் தான் நடந்தது. அதேபோல் விடாமுயற்சி படப்பிடிப்பும் தீபாவளியை அங்கேயே கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது.

Advertisement