தல 59 படத்திற்கு முதன் முறையாக கதாநாயகியை சிபாரிசு செய்த ஷாலினி..!

0
1176
Thala59
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். பெயரிடப்படாத இந்த புதிய படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கவிருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கான பூஜைகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துவங்கியது. மேலும், முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாகவும், வரும் ஜனவரி மாதம் துவங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்க : தல 59 படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம்..!

- Advertisement -

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே மற்றும் AAA பட இயக்குனர் ஆத்விக் ஆகியோர் கமிட் ஆகியிருந்தனர் அதுபோக பிரபல நடிகை நஸ்ரியாவும் இந்த படத்தில் இருக்கிறார். மேலும், சில நாட்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணியும் இந்த படத்தில் கமிட் ஆனார்.


இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரமான, பாலியல் தொல்லைக்கு உள்ளான மூன்று பெண்களில் ஒருவராக இவர் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த படத்தில் இவர் நடிக்க முக்கிய காரணம் அஜித்தின் மனைவி ஷாலினிதானாம். இவர்தான் முதல்முறையாக தல அஜித் நடிக்கும் படத்திற்கு கல்யாணியை சிபாரிசு செய்துள்ளாராம்.

-விளம்பரம்-
Advertisement