விஜயை போல அஜித்தும் அரசியலுக்கு வருவார்..!பிரபல விஜய் பட இயக்குனர் சர்ப்ரைஸ்..!

0
166
Vijayajith

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருந்து வருபவர்கள் விஜய் மற்றும் அஜித். கடந்த சில காலமாக நடிகர் விஜய் அரசியலில் வந்துவிட வேண்டும் என்று கடும் முனைப்பு காட்டி வருகிறார் என்று சமீப காலமாக அவரது நடிப்பில் வெளியான படங்களில் இருந்தே தெரிந்தது.

PT Selvakumar

ஆனால், அல்டிமேட் ஸ்டாரான அஜித், இதுவரை எந்த ஒரு அரசியல் செயலிலும் ஈடுபட்டது இல்லை கலைஞர் இருந்தபோதே திரை கலைஞர்களை அரசியலுக்கு கட்டாயபடுத்தாதீர்கள் என்று வெளிப்படையாக கூறியவர் அஜித். அதனால் நடிகர் அஜித்திற்கு அரசியலில் எந்த ஆசையும் இல்லை என்பது அப்போதே உறுதியாகிவிட்டது.

ஆனால், நடிகர் அஜித்தும் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று பந்தா பரமசிவம், புலி, போக்கிரி ராஜா போன்ற படங்களை தயாரித்த தயாரிப்பாளரும் இயக்குனருமான பிடி.செல்வகுமார் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இதுகுறித்து பேசியுள்ள அவர், விஜய் இன்னும் கொஞ்சம் நாளைக்கு படம் நடிக்கட்டும். அவரை எவ்வளவு அதிகமாக டார்ச்சர் செய்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் அரசியலுக்கு வருவார்.

P. T. Selvakumar

விஜய்யின் ஜாதகத்தை வைத்துப் பார்க்கும்போது என்னுடைய கணிப்புப் படி இன்னும் ஏழு ஆண்டுகளில் அரசியலுக்கு வருவார். விஜயை போல நடிகர் அஜித்தும் அரசியலுக்கு வருவார்.ஆனால்,விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரின் ஜாதக அமைப்பையும் வைத்து பார்க்கும்போது முதல்வராகும் கிரக நிலை விஜய்க்கே உள்ளது என்று கூறியுள்ளார்.