வேதாளம் படத்தில் இந்த காட்சியில் இப்படி ஒரு Mistake – க கவனிச்சிருக்கீங்களா ?

0
4342
ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிவா. இயக்குனர் சிவா இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த வேதாளம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தில் அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், சூரி, கோவை சரளா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு அனிரூத் இசை அமைத்து இருந்தார். இந்நிலையில் வேதாளம் படத்தில் சூரி நடித்த காட்சியின் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

படத்தில் ஒரு காட்சியில் அஜித் காரில் இருந்து இறங்கும் போது காருக்குள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால், அடுத்த காட்சியில் உடனே காரில் இருந்து சூரி இறங்குவார். தற்போது அந்தப் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதை தல ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளிவந்த விசுவாசம், நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படமுமே மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

- Advertisement -

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தல அஜித் அவர்கள் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதாநாயகி குறித்து இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. வலிமை படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 75 சதவீதம் முடிவடைந்த நிலையில் உள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய குழுவே இந்த படத்தில் பணியாற்றுகிறார்கள். அதுவும் தல அஜித் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் தல அஜீத் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement