உலகநாயகன் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் நேற்று(பிப்ரவரி 19) இரவு கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் தான் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உலகநாயகன் கமல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ப்ரியா பவானி சங்கர் என்று பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள பூந்தமல்லியில் நடைபெற்று வருகிறது. இதற்காக நசரத்பேட்டையிலுள்ள  இ வி பி பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தது.

நேற்றைய படப்பிடிப்பில் நடிகர் கமலும் கலந்துகொண்டார், நேற்று இரவு, படப்பிடிப்பின்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் ராட்சத கிரேன் சரிந்து விழுந்தது. இந்த கிரேன் மானிட்டர் எனும் படப்பிடிப்புக் காட்சிகளைப் பார்க்கும் கூடாரம் மீது விழுந்தது. அந்தப் பகுதியில்தான் இயக்குநர் ஷங்கர், உதவி இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என பலரும் இருந்தனர். இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, உதவி கலை இயக்குநர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது என மூன்று பேர் பலியாகியுள்ளனர். 8 பேர் படுகாயமடைந்தனர்.

Advertisement

இதையும் பாருங்க : விஜய் தன் மனைவியை மதம் மாற்றினாரா? வீட்டின் பூஜை அறை புகைப்படத்தை வெளியிட்ட எஸ் ஏ சி.

இந்த நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்த 3 பேர் உடலுக்கு கமல்ஹாசன் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல், விபத்து முடிந்த பின்னர் எல்லோரும் சொல்லும் விசயம் தவிர்த்து இருக்க வேண்டும் என்பது தான். இந்த விபத்து லைகா நிறுவனத்தில் நடந்த ஒரு விபத்தாக கருதவில்லை. படப்பிடிப்பில் நடந்த இந்த விபத்தை என் குடும்பத்தில் நடந்ததாகக் கருதுகிறேன். நான் சிறு வயதில் இருந்தே இந்த தொழில் தான் இருக்கிறேன் ஆனால், இந்த தொழிலில் பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்கும் இன்னொரு அசம்பாவிதம் தான் இது.

Advertisement

நான் நூலிழையில் உயிர் பிழைத்தேன். நான்கு நொடிகள் முன்பு வரை நானும் அங்கு தான் இருந்தேன்.சினிமாவில் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு இல்லாதது அவமானமாகும். கடைநிலை ஊழியர்களுக்கும் கூட காப்பீடு இருக்க வேண்டும் என்ற நிலையை எய்த வேண்டும். 100 கோடி 200 கோடி என்று மார்தட்டுக்கொள்ளும் நம்மால் கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு தர முடியவில்லை என்பது அவமானத்தை ஏற்படுத்துகிறது என்று பேசிய கமல் படப்பிடிப்பு தளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என்னால் முடிந்த ரூ.1 கோடி நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement