நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில்- ஜைனப் ஆகியோரின் வயது வித்தியாசம் குறித்த தான் தற்போது இணைத்தல் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் பல ஆண்டு காலமாக சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் நாகார்ஜுனா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார்.

மேலும், இவர் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தற்போது இவர் ‘குபேரா’ படத்தில் நடித்து இருக்கிறார். இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் வருகிறார். இந்த படத்தில் ஹீரோவாக தனுஷும், கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கிறார்கள். அதோடு இவர் ரஜினியின் கூலி படத்திலும் நடித்து இருக்கிறார். இதுவரை நாகார்ஜுனா நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, நடிகர் நாகார்ஜுனாவுக்கு இரண்டு மனைவிகள்.
நாகார்ஜுனா குடும்பம்:
பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷின் சகோதரி லட்சுமியை தான் 1984 ஆம் ஆண்டு நாகார்ஜுனா திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு பிறந்தவர் தான் நாக சைதன்யா. இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் 1990 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பின் நாகார்ஜுனா அவர்கள் பிரபல நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த மகன் தான் அகில். மேலும், இவரின் இரண்டும் மகன்களும் தெலுங்கு மொழியில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

நாகார்ஜுனா மகன்கள்:
இதற்கிடையில் நாக சைதன்யா- நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். பின் இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு நாக சைதன்யா-சோபிதா திருமணம்: ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அன்னப்பூரணா ஸ்டுடியோவில் நடந்தது. மேலும், நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் Zainab Ravdjee என்பவரை தான் 3 வருடங்களாக காதலித்து வந்தார். ஜைனப் ரவ்ட்ஜி லண்டனை சேர்ந்தவர்.

அகில்-ஜைனப் ரவ்ட்ஜி திருமணம்:
இவர் மும்பையில் ஒரு ஓவியராகவும், வாசனை திரவியம் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். ஹைதராபாத்தில் சேர்ந்த தொழிலதிபர் சுல்பி ராவ்ஜியின் மகள் தான் ஜைனப் ரவ்ட்ஜி ஆவார். மேலும், அகிலுக்கு இந்த வருடம் மார்ச் 24ஆம் தேதி தான் நிச்சயதார்த்தம் நடந்தது. பின் சில தினங்களுக்கு முன் அகில்-ஜைனப் ரவ்ட்ஜி இருவருக்கும் ஹைதராபாத்தில் உள்ள நாகர்ஜுனாவின் வீட்டில் எளிமையாக திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு இருந்தர்கள். இதை அடுத்து ஜூன் எட்டாம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நாகர்ஜுனா குடும்பத்திற்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வயது வித்தியாசம்:
இப்படி இருக்கும் நிலையில் அகில்-ஜைனப் ரவ்ட்ஜி வயது வித்தியாசம் குறித்த விவரம் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, பிரபலங்கள் திருமணம் முடிந்த உடனே அவர்களுடைய வயது வித்தியாசம் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக வைரலாகும். அந்த வகையில் அகில்- ஜைனப் ரவ்ட்ஜி திருமணம் முடிந்த இருவருடைய வயது வித்தியாசம் தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இருவருக்கும் இடையே 9 வயது வித்தியாசம் இருக்கிறது. அகிலுக்கு 30 வயது தான். ஆனால், ஜைனப் ரவ்ட்ஜி 39 வயது. இருந்தாலும் காதலுக்கு வயது முக்கியமில்லை என்பதால் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.






