கண்ணான கண்ணே சீரியல் நடிகையா இப்படி? ரசிகர்களை மிரள வைத்த புகைப்படம் இதோ.

0
252
- Advertisement -

கண்ணான கண்ணே சீரியல் நடிகையின் பிகினி புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் அக்ஷிதா போப்பையா. இவர் கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் பிறந்தவர். இவர் தன்னுடைய பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை மைசூரில் முடித்தார். மாடல் அழகியாக தான் இவர் மீடியாவிற்கு நுழைந்தார்.

-விளம்பரம்-

அதற்குப்பின் இவர் தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகி இருந்த அழகு என்ற சீரியலின் மூலம் சின்னத்திரை உலகில் அறிமுகமாகி இருந்தார். அதை அடுத்து இவர் சில கன்னட படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் இவருக்கு சினிமாவில் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்குப் பின் இவர் சின்னத்திரை சீரியல் பக்கமே வந்துவிட்டார்.

- Advertisement -

அக்ஷிதா குறித்த தகவல்:

அதிலும் இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த கண்ணான கண்ணே தொடரின் மூலம் தான் பிரபலம் ஆகி இருந்தார். அப்பா-மகள் இடையே பாச போராட்டத்தை மையமாக கொண்ட தொடர். தெலுங்கில் ‘பௌர்ணமி’ என்ற டைட்டிலில் ஒளிபரப்பாகி வந்த இத்தொடர் தமிழில் ‘கண்ணான கண்ணே’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி இருந்தது. இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த தொடரில் கதாநாயகனாக ராகுல் ரவி நடித்தார்.

கண்ணான கண்ணே சீரியல்:

இந்த தொடரில் நிமேஷிகா ராதாகிருஷ்ணன் கதாநாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இந்த தொடரில் பிரித்திவிராஜ், பிரீத்தி சஞ்சீவ், அக்ஷிதா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இதை அடுத்து கடைசியாக இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சமீபத்தில் வெற்றிகரமாக முடிவடைந்த தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

-விளம்பரம்-

அக்ஷிதா நிச்சயதார்த்தம்:

அதற்குப் பின் இவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை. மேலும், சில மாதங்களுக்கு முன்புதான் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. இவர் தயாரிப்பாளர் ப்ரீத்தம் சுரேஷ் என்பவரை காதலித்து வந்தார். கூடிய விரைவிலேயே இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க அக்ஷிதா சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்.

லேட்டஸ்ட் புகைப்படம்:

இவர் அடிக்கடி தான் எடுக்கும் புகைப்படம் வீடியோக்களை எல்லாம் இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த பலருமே, சீரியலில் தான் ஹோம்லி நிஜத்தில் அப்படியே வேறு. படு கிளாமராக இருக்கிறார். தற்போது இவர் பதிவிட்ட பிகினி புகைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Advertisement