ஏ எல் விஜயின் புது வீட்டிற்கு ஆர்யா வந்திருக்கும் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஏ எல் விஜய்யும் ஒருவர். அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான ‘கிரீடம்’ படத்தின் மூலம் ஆம் அறிமுகமானவர் ஏ எல் விஜய். அதன் பின்னர் “மதராசபட்டினம்’ , ‘தெய்வ திருமகள்’ போன்ற வெற்றி படங்களை இயக்கி இருந்தார் இயக்குனர் ஏ எல் விஜய்.
இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. மேலும், இவர் இயக்கிய ‘தெய்வ திருமகள், தலைவா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலா பாலுக்கும், ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. பின்னர் இவர்கள் இருவரும் 2014 ஆம் ஆண்டு திருமணமும் செய்துகொண்டனர். ஆனால், 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்தனர். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் தான் இவர்கள் பிரிந்தனர் என்று கூறப்பட்டது.
ஏ எல் விஜய்-அமலா பால் சர்ச்சை:
அதற்கு பின் இயக்குனர் விஜய் கடந்த 2019 ஆம் ஆண்டு ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். அமலா பால் திருமணத்திற்கு பின்னரும் நடிப்பை தொடர்ந்ததாலும், திருமணத்திற்கு பின் அவர் கூறியபடி மதம் மாறாததாலும் தான் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அமலா பால், தனது விவாகரத்துக்கு வேறு எந்த நபரும் பொறுப்பேற்கவில்லை. இந்த முடிவு தம்மால் மட்டும் முழுமையாக எடுக்கப்பட்டது என்று கூறியிருந்தார்.
ஏ எல் விஜய் திருமணம்:
மேலும், இரண்டாம் திருமணம் செய்துகொண்ட ஏ எல் விஜய்க்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இவர் கடைசியாக ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை ‘தலைவி’ என்ற பெயரில் இயக்கி இருந்தார். மறைந்த நடிகையும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த படம் தலைவி. இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா, அரவிந்த் சுவாமி, சமுத்திரகனி, நாசர் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.
ஏ எல் விஜய் இயக்கிய படம்:
படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பள்ளிப்பருவம் முதல் தொடங்கி அரசியலில் நுழைந்தது பிறகு அவர் முதல்வராக பதவியேற்று நாட்டை ஆண்டது என அனைத்துமே இயக்குனர் அழகாக சொல்லி இருந்தார். இந்த படம் திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தது. அதற்கு பின் ஏ எல் விஜய் இயக்கத்தில் எந்த படமும் வெளியாக இல்லை. இவர் அடுத்த படம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.
ஏ எல் விஜய் புது வீடு:
இந்நிலையில் ஏ எல் விஜய் புது வீடு கட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இயக்குனர் விஜய் அவர்கள் தான் கட்டிய புது வீட்டில் குடியேறி இருக்கிறார். இதற்கு விஜயின் வீட்டிற்கு பிரபலங்கள் பலரும் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். அந்த வகையில் ஆர்யா- சாயிஷா குடும்பத்துடன் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் அமலா பால் இரண்டாம் திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.