ப்ரோமஷனுக்கு கூட வராமல் தன்னை விட பேமஸ் ஆன ஜெனி – ராஜமௌலி மீது இருந்த செம கடுப்பில் ஆல்யா பத் செய்துள்ளதை பாருங்க.

0
433
rrr
- Advertisement -

இந்திய சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படங்களில் ஒன்று பாகுபலி. பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு பின் இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி உள்ள படம் RRR. இந்த படம் ஐந்து ஆண்டுகள் கழித்து வெளியாகி உள்ளது. RRR – இரத்தம் ரணம் ரெளத்திரம் ஆகும். இந்த படத்தில் ராம் சரண் ஜூனியர், ஜூனியர் என்டிஆர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் இந்த படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, அலிசான் டூடி போன்ற பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தை டிவிவி நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

நீண்டகால எதிர்பார்ப்புகளுக்கு பிறகு இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் VFX காட்சிகள் அற்புதம். அதோடு ஆக்ஷன் கட்சிகளும் மெய் சிலிர்க்க வைக்கிறது. குறிப்பாக ‘நாட்டு நாட்டு’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இந்த பாடலில் ராம் சரண் மற்றும் ஜூனியர் Ntr-ன் நடனத்தை பார்த்து ஆடாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். மேலும், இந்த படம் 400 கோடி தயாரிப்பில் உருவானது. ஆனால், 500 கோடிக்கு மேல் அதிகமான வசூலை ஈட்டி உள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

RRR படம் பற்றிய தகவல்:

இதனால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது. அதே வேளையில் படத்தில் கதாநாயகியாக நடித்த ஆலியா பட் அவர்கள் RRR படத்தின் இயக்குனர் மீது அதிருப்தியில் இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் அலியா பட். பாலிவுட் சினிமாவில் வெளிவந்த ஹைவே, கல்லி பாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். அதோடு சினிமாவில் நுழைந்த குறுகிய காலத்தில் இவர் தனெக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்தார்.

ராஜமௌலியை அலியா பட் அன்பாலோ செய்ய காரணம்:

இந்நிலையில் இவர் RRR படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். ஆனால், இந்த படத்தில் அவர் எதிர்பார்த்தது போல் பெரிய கதாபாத்திரம் இல்லை. படத்தில் மொத்தமே 7 சீன்கள் அளவுக்கு தான் அவர் காட்சிகளில் நடித்திருக்கிறார். அதிலும் ஒரு காட்சியில் மட்டுமே பெரிய டயலாக் கொடுக்கப்பட்டிருக்கும். இதனால் அலியா பட் RRR படக்குழுவினரின் மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் கோபத்தில் அலியா பட் தன்னுடைய இன்ஸ்டாவில் இருந்து இயக்குனர் ராஜமௌலியை அன்பாலோ செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

ராஜமௌலி படங்கள் :

அது தொடர்பான புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. பொதுவாகவே இயக்குனர் ராஜமௌலி படங்களை பொறுத்தவரை ஹீரோயின்களுக்கு நிறைய முக்கியத்துவம் இருக்கும். மகதீரா, நான் ஈ, பாகுபலி போன்ற பல படங்களில் கதாநாயகிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். இதனால் தமன்னா, அனுஷ்கா எல்லாருக்கும் தென்னிந்திய சினிமா உலகில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், தற்போது வெளியாகியுள்ள RRR படத்தில் அலியா பட் மொத்தமே 7 சீன்கள் மட்டுமே வந்து சென்றிருக்கிறார்.

அலியா பட் நடித்த படம்:

ஜெனி என்ற ரோலில் நடித்த ஒலிவியா மாரிஸ்க்கு நிறைய காட்சிகள் இருந்ததுடன் அவரின் பாத்திரமும் ரசிக்கும்படியாக இருந்தது. இதனால் தான் அலியா பட் இயக்குனர் ராஜமௌலியை அண்ட் பாலோ செய்து அதிருப்தியில் இருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் RRR படத்திற்கு முன்பு தான் அலியா பட் நடித்த கங்குபாய் படம் பாலிவுட்டில் வெளியானது. இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி கொடுத்தது. இந்த படம் குறித்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement