தன்னுடைய கதையை நிராகரித்தாரா விஜய் மகன் - விஜய்யின் லேட்டஸ்ட் பேட்டியை கண்டு பிரேமம் இயக்குனர் போட்ட பதிவு.

By Rajkumar · 11/4/2022

சமீபத்தில் நடந்த நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் தன்னுடைய மகன் சஞ்சய் குறித்து
பேசியிருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். பொதுவாக விஜய் படங்கள் என்றாலே ரிலீசுக்கு முன்னர் இசை வெளியிட்டு விழா ரசிகர்களால் மிகுந்த எதிர்பார்க்கப்படும். அதுவும் இசை வெளியிட்டு விழாவில் விஜய்யின் பேச்சை கேட்கவே அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துகொண்டு இருப்பார்கள்.

இதையும் பாருங்க : பீஸ்ட் படத்தின் மொத்த பட்ஜெட் மற்றும் விஜய்யின் சம்பள விவரம் - அடேங்கப்பா இத்தனை கோடியா ?

10 ஆண்டு கழித்து விஜய் பேட்டி ;

இறுதியாக மாஸ்டர் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் விஜய் பேசியது மட்டுமல்லாமல் மேடையில் நடனமாடி இருந்தார். இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் இசை வெளியிட்டு விழாவை ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்க, பீஸ்ட் படத்திற்கு இசை வெளியீட்டு விழா இல்லை என்று அறிவிப்பு வெளியானது. இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் பெரும் அப்செட் அடைந்தனர். இப்படி ஒரு நிலையில் 10 ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய் பேட்டியில் பங்கேற்றார்.

தன் மகன் குறித்து விஜய் :

இதில் இயக்குனர் நெல்சன் அவர்கள் நடிகர் விஜயுடன் நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அப்போது அவர் விஜயின் குடும்பம் பற்றியும் சில கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக விஜய்யின் மகன் சஞ்சய் குறித்து, அடுத்ததாக என்ன செய்யப்போகிறார்? அவருக்கு சினிமாவில் ஆர்வம் இருக்கா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு விஜய் அவர்கள் கூறியிருப்பது, அவர் மனதில் என்ன இருக்கு என்று தெரியவில்லை. நான் அவரை வற்புறுத்த மாட்டேன். அவருக்கு பிடித்தால் பண்ணட்டும் என்று விட்டு விட்டேன்.

பிரேமம் இயக்குனர் சொன்ன கதை :

ஒருமுறை பிரேமம் படத்தோட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் என்னை சந்திக்க வீட்டுக்கு வந்தார். பின் ஒரு கதை சொல்லணும் என்று சொன்னார். நானும் சரி சொல்லுங்கள் என்று சொன்னேன். அதற்கு பிறகு தான் உங்க பையன் கிட்ட சொல்லனும் என்று சொன்னார். அந்த கதையை கேட்டேன் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. எப்படியாவது சஞ்சய் இந்த கதையில் நடிக்க ஓகே சொல்லிடுவான் என்று நினைத்தேன். ஆனால், அவன் இப்போதைக்கு எதுவும் வேண்டாம் இரண்டு வருடம் டைம் வேணும் என்று கேட்டான்.

அல்போன்ஸ் பதிவு :

நானும் சரி என்று சொல்லிவிட்டேன். அவன் கேமராவுக்கு முன்னாடி வேலை பண்ண போறானா? இல்லை பின்னாடி வேலை பண்ண போறானா? என்று தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறினார். ஆனால், இது உண்மையா இல்லையா என்று பலர் கூறி வந்த நிலையில் விஜய் சொன்ன இந்த விஷயத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்.

behindtalkies AMP · Quick view
View full