பீஸ்ட் படத்தின் மொத்த பட்ஜெட் மற்றும் விஜய்யின் சம்பள விவரம் – அடேங்கப்பா இத்தனை கோடியா ?

0
1202
Beast
- Advertisement -

பீஸ்ட் படத்தின் மொத்த பட்ஜெட் பற்றியும், விஜய்யின் சம்பள விவரம் பற்றிய தகவலும் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-
Beast

இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். மேலும், இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. இதை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டு பாடல் ஜாலியோ ஜிம்கானா வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதுமட்டும் இல்லாமல் இந்த பாடலுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் நடனமாடி வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்கள்.

இதையும் பாருங்க : 6 வயது மகனை இழந்த 2 மாதத்தில் நடிகரும் மரணம் – நண்பர்கள் உருக்கம். என்ன கொடுமையோ.

- Advertisement -

பீஸ்ட் படம் பற்றிய தகவல்:

விஜய்யின் பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த படத்தில் விஜய் ‘வீர ராகவன்’ என்ற பெயரில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் பீஸ்ட் படத்தின் ட்ரைலர் வெளியாகி இருந்தது. ட்ரெய்லரில் ஒரு மால்லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் பண்ணுகிறார்கள். இந்த தீவிரவாத கும்பலில் இருந்து விஜய் எப்படி மக்களைக் காப்பாற்றினார்? என்பது தான் படத்தின் சுவாரஸ்யமே என்று கூறப்படுகிறது.

beast

பீஸ்ட் படம் ரிலீஸ் பற்றிய அப்டேட்:

மேலும், சில தினங்களுக்கு முன்பு தான் இந்தப் படத்தின் மூன்றாவது பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பீஸ்ட் படம் ரிலீசாகும் தேதி நெருங்கி வருவதால் படத்தை பற்றிய தகவல்கள் அடிக்கடி சோசியல் மீடியாவில் வெளியாகி வருவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் ஏற்கனவே பல நகரங்களில் துவங்கிவிட்டது. புக்கிங் துவங்கிய சில மணி நேரத்திலேயே இந்த படத்தின் டிக்கெட்டுகள் அனைத்தும் பதிவாகிவிட்டது. இன்னும் சில தினங்களில் இந்தப் படம் வெளியாக உள்ள நிலையில் இப்படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-

படத்தில் நடித்தவர்களின் சம்பளம்:

அது என்னவென்றால், இப்படத்தில் நடித்தவர்களுக்கு எவ்வளவு சம்பளம் என்பது பற்றிய தகவல் தான். பீஸ்ட் படத்தில் கதாநாயகனாக நடித்த தளபதி விஜய்க்கு 80 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதனை அடுத்து இயக்குனர் நெல்சனுக்கு 8 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் அனிரூத்க்கு 4 கோடி சம்பளம் தகவல் வெளியானது. மேலும், இந்த திரைப்படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் மொத்தம் 8 கோடி ரூபாய் என்றும் படத்தின் விநியோகம், விளம்பரம் போன்ற பணிகளுக்கு மொத்தமாக 75 கோடி ரூபாய் செலவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

படத்தின் மொத்த பட்ஜெட்:

ஆகவே படத்தின் மொத்த பட்ஜெட் 175 கோடி ரூபாய். படம் ரிலீஸாவதற்கு முன்பே செலவு செய்த பணத்தை விட அதிக பணத்தை எடுத்து விட்டதாக செய்திகள் வெளியாகின. கூர்க்கா படத்தின் காப்பி என்று பீஸ்ட் படத்தை சிலர் கிண்டலடித்து வந்தாலும் இது முற்றிலும் தனித்துவமான சிறப்பான படம் என்று இயக்குனர் நெல்சன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் வெளியாக போகிறது. இந்த படம் கிட்டத்தட்ட 800 தியேட்டர்களில் வெளியாகுகிறது.

Advertisement