ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள இப்படி ஒரு மாற்றமா – குழப்பத்தில் ஆல்யா மானஸாவின் புதிய சீரியல்.

0
732
alya
- Advertisement -

ஆல்யா மானசாவின் புதிய சீரியல் ஒளிபரப்பு ஆவதில் குழப்பம் ஏற்பட்டிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆல்யா மானசா. இவர் முதலில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று இருந்தார். அதன் பின் ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யா நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியலில் சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் இவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்கள். இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டார் ஆல்யா

- Advertisement -

ஆல்யா- சஞ்ஜீவ் நடிக்கும் சீரியல் :

பிறகு விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆல்யா நடித்து கொண்டு வந்தார். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். பின் ஆல்யாவிற்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

உடல் எடை குறைவு:

ஆல்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. மேலும், இரண்டாவது குழந்தைக்கு பிறகு ஆல்யா உடல் எடை கூடி இருந்தார். இவர் சீரியலில் நடிக்கவில்லை என்றாலும், இவர்கள் தனியாக தொடங்கி இருக்கும் யூடுயூப் சேனலில் அடிக்கடி வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஆல்யா ரசிகர்களுடன் தொடர்பில் தான் இருக்கிறார். சமீபத்தில் ஆல்யா சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறி இருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். இதனால் ஆல்யா மானஸா சீரியலில் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைக்க கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

கம்பேக் கொடுக்கும் ஆல்யா:

மேலும், சரிகம புரொடக்ஷன் தயாரிக்கும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் தான் ஆல்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கான அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியல் ஒளிபரப்பாகும் நேரம் குறித்த சர்ச்சை தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, ஏற்கனவே சன் டிவியில் டிஆர்பியில் முன்னிலை வகுத்து வரும் சீரியல்களில் ஒன்று ரோஜா சீரியல். இந்த சீரியல் பல வருடங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த சீரியல் இறுதிக் கட்டத்தை நெருங்கி இருக்கிறது. இந்த சீரியல் சன் டிவியில் 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

இனியா சீரியல் ஒளிபரப்பாகும் நேரம்:

மேலும், டிசம்பர் 3ஆம் தேதி அன்று ரோஜா சீரியல் முடிவடைவதால் அதன்பின் டிசம்பர் 5ஆம் தேதியிலிருந்து 9 மணிக்கு ஆலியா மானசா நடிக்கும் இனியா சீரியலை ஒளிபரப்ப சன் டிவி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான ப்ரோமோக்கள் எல்லாம் சன் டிவியே வெளியிட்டு இருந்தது. இந்த நிலையில் திடீரென அந்த ப்ரோமோ யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறது. அதற்கு பதில் வெளியான புதிய ப்ரோமோவில் இனியா சீரியல் விரைவில் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. ரோஜா சீரியல் முடிவடையும் 9 மணிக்கு வேறு எந்த சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது? ஆல்யா நடிக்கும் இனியா சீரியலின் டைம் என்ன? என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

Advertisement