மீண்டும் நடிக்க வந்த ஆல்யா – எந்த தொலைக்காட்சியில் தெரியுமா ? இதோ விவரம்.

0
354
- Advertisement -

ஆல்யா மானசா நடிக்கும் புதிய சீரியல் குறித்த அப்டேட் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது. சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. இதற்கு முன்பு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்று இருந்தார் ஆல்யா.

-விளம்பரம்-
Alya

பின் ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யாவும், சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ்வும் நடித்திருந்தார்கள். இந்த சீரியலின் மூலம் இவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டார் ஆல்யா.

- Advertisement -

ஆல்யா- சஞ்ஜீவ் நடிக்கும் சீரியல் :

பிறகு விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆல்யா நடித்து கொண்டு வந்தார். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். பின் ஆல்யாவிற்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

alya

உடல் எடை குறைவு:

ஆல்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. மேலும், இரண்டாவது குழந்தைக்கு பிறகு ஆல்யா உடல் எடை கூடி இருந்தார். இவர் சீரியலில் நடிக்கவில்லை என்றாலும், இவர்கள் தனியாக தொடங்கி இருக்கும் யூடுயூப் சேனலில் அடிக்கடி வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஆல்யா ரசிகர்களுடன் தொடர்பில் தான் இருக்கிறார். சமீபத்தில் ஆல்யா சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறி இருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

கம்பேக் கொடுக்கும் ஆல்யா:

ஆனால், எந்த சேனல் சீரியல் என்று தான் தெரியவில்லை. இன்னும் இரண்டு மாதத்தில் சீரியலில் என்னை பார்க்கலாம் என்று ஆல்யா கூறி இருந்தார். இதனால் ஆல்யா மானஸா சீரியலில் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைக்க கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். அந்த வீடியோவை இவர் ஏற்கனவே தன் இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் ஆலியா மானசா நடிக்கும் புதிய சீரியல் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியா சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

ஆல்யா நடிக்கும் புது சீரியல்:

ஆல்யா சில மாதங்களுக்கு முன்பே புதிய தொடரில் கமிட்டாகி அறிவித்திருந்தார். மேலும், சரிகம புரொடக்ஷன் தயாரிக்கும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய தொடரில் தான் ஆல்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது அதற்கான அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து சீரியலின் பெயர் என்ன? சீரியலில் உங்களுடன் நடிப்பவர் யார்? என்றெல்லாம் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Advertisement