சன் டிவிக்கு சென்றது சம்பளத்தை உயர்த்திய நடிகை ஆல்யா மானசா – இனியா சீரியலில் அவரின் ஒரு நாள் சம்பளம் எவ்ளோ தெரியுமா ?

0
1473
alya
- Advertisement -

இனியா சீரியலுக்காக நடிகை ஆல்யா மானசா வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆல்யா மானசா. இவர் முதலில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ என்ற நடன நிகழ்ச்சியில் தான் போட்டியாளராக பங்கு பெற்று இருந்தார். அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் செம்பா கதாபாத்திரத்தில் ஆல்யா நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இந்த சீரியலில் சின்னையா கதாபாத்திரத்தில் சஞ்சீவ் நடித்திருந்தார். இந்த சீரியலின் மூலம் இவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்கள். அதோடு இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்டார் ஆல்யா.

- Advertisement -

ஆல்யா- சஞ்ஜீவ் நடிக்கும் சீரியல் :

பிறகு விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஆல்யா நடித்து கொண்டு வந்தார். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் ஆல்யா இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்தார். பின் ஆல்யாவிற்கு குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

alya

உடல் எடை குறைவு:

ஆல்யாவிற்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. மேலும், இரண்டாவது குழந்தைக்கு பிறகு ஆல்யா உடல் எடை கூடி இருந்தார். இவர் சீரியலில் நடிக்கவில்லை என்றாலும் இவர்கள் தனியாக தொடங்கி இருக்கும் யூடுயூப் சேனலில் அடிக்கடி வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். சமீபத்தில் ஆல்யா சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்க இருப்பதாக கூறி இருந்தார். இதனால் ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இனியா சீரியல்:

இதனால் ஆல்யா மானஸா சீரியலில் நடிப்பதற்காக தனது உடல் எடையை குறைக்க கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். மேலும், சரிகம புரொடக்ஷன் தயாரிக்கும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இனியா தொடரில் தான் ஆல்யா நடிக்கிறார். டிசம்பர் 5ஆம் தேதியிலிருந்து 9 மணிக்கு இனியா சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. கதாநாயகன் விக்ரம் கதாபாத்திரத்தில் ரிஷி நடிக்கிறார்.

alya

ஆல்யா மானசா வாங்கும் சம்பளம்:

இந்த கதையை சேக்கிழார் எழுதுகிறார், நாராயணமூர்த்தி இயக்குகிறார். இந்நிலையில் இனியா சீரியலுக்காக நடிகை ஆல்யா மானசா வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே, ஆல்யா மானசா அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் நடித்த சீரியலுக்கு ஒரு நாளைக்கு 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் பெற்று வந்திருந்தார். தற்போது சன் டிவிக்கு சென்றவுடன் 20000 ரூபாய் சம்பளம் உயர்த்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement