அரைகுறை ஆடையில் உடல் முழுவதும் வண்ணம்.! ஹோலி பண்டிகை கொண்டாடிய அமலா பால்.!

By Rajkumar · 21/3/2019

நடிகர் ஹரிஷ் கல்யாண் அறிமுகமான “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால்.அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். தற்போது ஆடை மற்றும் அதோ அந்த பறவை போல போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

கடைசியாக நடிகர் விஷ்ணு விஷாலுடன் ‘ராட்சசன்’ படத்தில் நடித்திருந்தார் .நடிகை அமலா பால் இயக்குனர் ஏ. எல். விஜயை திருமணம் செய்து கொண்டு பிறகு ஒரு சில வருடங்களிலேயே விவாகரத்தும் பெற்றார். இருப்பினும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இதையும் படியுங்க : விஜய்யோட இந்த படத்தை பார்த்து நான் பயந்துட்டேன்..! அமலா பால் அதிரடி.! 

நடிகை அமலா ஷூட்டிங் இல்லாத தருணங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை எடுத்து தனது ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். ஆனால் இவர், சமீப  காலமாக எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் அதனை கலாய்த்து தள்ளி விடுகின்றனர் மீம் கிரேட்டர்கள்.

https://www.instagram.com/p/BvRAoDQHVKv/

இந்தநிலையில் இன்று இந்தியா முழுவதும் ஹோலி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல நடிகை அமலா பாலும் தனது நண்பர்களுடன் ஹோலி பண்டிகையை வெகு சிறப்பாக கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full