விஜய்யோட இந்த படத்தை பார்த்து நான் பயந்துட்டேன்..! அமலா பால் அதிரடி.!

0
536
Amala-paul

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக விளங்கி வருகிறார நடிகர் விஜய். இவரது படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாக அமைந்து விடுகிறது. விஜய்யின் ரசிகர்கலும் படத்தின் முதல் நாளில் திரையரங்குகளை தெறிக்கவிட்டுவிடுன்றனர். அந்த வகையில் நடிகை அமலா பால், ஒரு விஜய் படத்தின் கொண்டாட்டத்தை நேரில் கண்டு பயந்துள்ளதாக கூறியுள்ளார்.

Amala Paul

தென்னிந்திய நடிகையான அமலா பால் தமிழில் முன்னணி நடிகர்களான விஜய்,விக்ரம் போன்ற பல்வேறு ஹீரோக்களுடன் நடித்துவிட்டார். மேலும் , இயக்குனர் விஜய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான “தலைவா” படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தற்போது ரத்ன குமார் இயக்கத்தில் “ஆடை” படத்திலும், விஷ்ணு விஷால் ஹீரோவாக நடித்துள்ள “ராட்சசன் ” என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் நடிகை அமலா பால். சமீபத்தில் “ராட்சசன் ” படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகை அமலா பால் விஜய்யின் போக்கிரி படத்தை திரையரங்கில் திரையரங்கில் கண்டபோது ஏற்பட்ட சம்பவம் பற்றி கூறியுள்ளார்.

pokiri

இதுகுறித்து பேசிய அமலா பால், நான் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது பள்ளியை கட் அடித்துவிட்டு விஜய்யின் “போக்கிரி” படத்திற்கு சென்றிருந்தேன். அந்த திரையரங்கில் என்னையும் சேர்த்து 2 பெண்கள் மட்டும் தான் இருந்தனர் மற்ற அனைவரும் ஆண்கள் தான். அந்த படத்தில் “டோலு டோலு தான் அடிக்கிறான்” என்ற பாடலின் போது ரசிகர்கள் அனைவரும் நடனமாடிக்கொண்டு அமர்க்களம் செய்ததை கண்டு நான் மிகவும் பயந்து போனேன். படம் முடியும் வரை நான் பயத்துடனே அமர்ந்து கொண்டிருந்தேன் என்று கூறியுள்ளார்.