விவகாரத்திர்க்கு தனுஷ் காரணமா ? முன்னாள் மாமனாரின் சர்ச்சைக்கு அமலா பால் பதிலடி.

0
13070
Amala-paul
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் அமலா பால் பிரபல இயக்குனரான ஏ ஏ எல் விஜய்யை திருமணம் செய்து கொண்டு பின்னர் பிரிந்தார் என்பது பலரும் அறிந்த ஒன்று. தமிழில் “மதராசபட்டினம்’ , ‘தெய்வ திருமகள்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிவர் இயக்குனர் ஏ எல் விஜய். மேலும், இவர் இயக்கிய ‘தெய்வ திருமகள், தலைவா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலா பாலுக்கும், ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. 2014 ஆம் நடைபெற்ற இவர்களது திருமணம் மூன்றே ஆண்டுகளில் விவகாரத்தில் முடிந்தது.

-விளம்பரம்-
Amala-paul

பின்னர் 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்தனர். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் தான் இவர்கள் பிரிந்தனர் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இயக்குனர் விஜய் கடந்த 11ம் தேதி ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். தனது முதல் கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டது குறித்து எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருக்கிறார் நடிகை அமலாபால். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஏ எல் விஜய்யின் தந்தை அமலா பாலை தனது மகன் ஏன் விவாகரத்து செய்தார் என்பதற்கான காரணத்தை சொன்னார்.

- Advertisement -

அதில், அமலா பால் திருமணத்திற்கு பின்னரும் நடிப்பை தொடர்ந்ததாலும், திருமணத்திற்கு பின் அவர் கூறியபடி மதம் மாறாததாலும் தான் பிரச்சனை ஏற்பட்டு என்று கூறியிருந்தார். மேலும், அதே போல விஜய் மற்றும் அமலா பால் விவாகரத்திற்கு தனுஷ் தான் காரணம் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அமலா பாலிடம் இதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டதற்கு, விவாகரத்து சர்ச்சை தேவையற்றது மேலும் அது ஒரு தனிப்பட்ட விஷயம் என்று கூறினார்.

Image result for amala paul dhanush

-விளம்பரம்-

அதே போல தனது விவாகரத்துக்கு வேறு எந்த நபரும் பொறுப்பேற்கவில்லை என்றும், இந்த முடிவு தம்மால் மட்டும் முழுமையாக எடுக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார். மேலும் தனுஷை தனது நலம் விரும்பி என்றும்அமலா பால் கூறியுள்ளார். அதே போல இரண்டாவது திருமணம் பற்றி பேசிய அமலா பால், அது எப்போது வேண்டுமானாலும் நடக்காது என்றும், தனது தற்போதைய திட்டங்களை முடித்த பின்னர் அதற்கான அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் கூறினார்.

Advertisement