அது அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். அமலா பால் தரப்பு ஷாக்கிங் விளக்கம்.

0
32687
amalapaulmarriage
- Advertisement -

தமிழில் “மதராசபட்டினம்’ , ‘தெய்வ திருமகள்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிவர் இயக்குனர் ஏ எல் விஜய். மேலும், இவர் இயக்கிய ‘தெய்வ திருமகள், தலைவா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலா பாலுக்கும், ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. 2014 ஆம் நடைபெற்ற இவர்களது திருமணம் மூன்றே ஆண்டுகளில் விவகாரத்தில் முடிந்தது. பின்னர் 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பிரிந்தனர். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் தான் இவர்கள் பிரிந்தனர் என்று கூறப்பட்டது.

-விளம்பரம்-
Image

- Advertisement -

ஆனால், விவாகரத்திற்கு பின்னரும் இவர்கள் இருவரும் அவரவர் வேலைகளை செய்து வருகின்றனர். நடிகை அமலா பால் தற்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் விஜய் கடந்த 11ம் தேதி ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். தனது முதல் கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டது குறித்து எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருக்கிறார் நடிகை அமலாபால். இருப்பினும் கடந்த சில காலமாகவே அமலாபால் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற சில செய்திகளும் கிசுகிசுக்கப்பட்டு வந்த வண்ணம் இருந்தது.

சமீபத்தில் தனது இரண்டாம் திருமணம் குறித்து பேசிய அமலா பால், தற்போது காதலில் இருப்பதாகவும் அவருடைய பெயரை நான் இப்போது தெரிவிக்கப்படவில்லை என்றும் ஆனால், அவர் திரையுலகை சேர்ந்தவர்கள் இல்லை என்று கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால், திருமணம் குறித்து பேசிய அமலாபால் இப்போதைக்கு திருமணம் குறித்து எதையும் யோசிக்கவில்லை என்றும் தற்போது தான் சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து வருவதால் திருமணம் குறித்த எந்த ஒரு திட்டமும் இல்லை என்றும் கூறி இருந்தார்.

-விளம்பரம்-

மேலும், நடிகை அமலா பால் பிரபல பாடகர் பவிந்தர் சிங் என்பவரை காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. பவிந்தர் சிங்கின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அமலா பாலுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அடிக்கடி வைரலானது. நேற்று (மார்ச் 20) பவிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலா பாலுடன் மணக்கோலத்தில் இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். இதனால் அமலா பாலுக்கு இரண்டாம் திருமணம் நடைபெற்று விட்டது என்று பல்வேறு இணையதளத்திலும் செய்திகள் பரவியது.

ஆனால், அந்த பதிவினை ஒரு சில மணி நேரத்திலேயே பவிந்தர் சிங் நீக்கி விட்டார். இந்த நிலையில் அமலா பால் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று அமலா பால் தரப்பு விளக்கமளித்துள்ளது. அதில், இந்தத் திருமணம் பற்றி வந்துகொண்டிருக்கும் செய்தி தவறு. மும்பையில் நடந்த ஈவன்ட் ஒன்றில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இதை எதற்காக பாவ்னிந்தர் இன்ஸ்டாவில் பகிர்ந்தார் என்று தெரியவில்லை. திருமணம் என்பது அமலாபாலின் தனிப்பட்ட விஷயம். தற்போது பரவி வரும் செய்திக்கும் அவருக்கும் சம்பந்தம் இல்லை” என மேனேஜர் தரப்பிலிருந்து கூறபட்டுள்ளது.

Advertisement