அஜித்தின் இந்த பாடலை கேட்டு வயித்துல இருக்கும் குழந்தை ஒதச்சது.! நெகிழ்ந்த ஸ்ரீரஞ்சனி.!

By Rajkumar · 20/2/2019

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்குபெற்று வந்தவர் தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி. கடந்த சில மாதங்களாக இவரை அந்த நிகழ்ச்சியில் காணவில்லை, காரணம் தற்போது கருவுற்று இருக்கிறார் ஸ்ரீரஞ்சனி.

விஜய் டிவியில் ஒளிபரப்பான `கல்யாணம் முதல் காதல் வரை’, `நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய தொடர்களில் நடித்த அமித் பார்கவும் ஆங்கர் ஸ்ரீரஞ்சனியும் காதலித்தார்கள் என்றாலும், பெற்றோரின சம்மதத்துடனேயே இவர்களது திருமணம் 2016-ம் ஆண்டு நடைபெற்றது. 

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீரஞ்சனி தாய்மை அடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.அஜித்துடன் `ஆரம்பம்’ படத்தில் நடித்திருக்கும் அமித் சிறப்பாகப் பாடவும் செய்வார் என்பதால், `விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற `கண்ணான கண்ணே’ பாடலை தினமும் இரவு மனைவி ரஞ்சனி வயிற்றின் அருகே சென்று பாடுகிறாராம்.

கணவர் பாடிய `கண்ணான கண்ணே’ பாடலைக் கேட்கிறப்ப வயித்துக்குள்ள அமைதியாகவே இருந்துட்டு இருந்ததா, ஒருநாள் பாட்டை மாத்தி `அடிச்சுத் தூக்கு’ பாடலைப் பாடச் சொன்னேன். சொன்னா நம்ப மாட்டீங்க, அந்தப் பாட்டைக் கேட்ட மறு நிமிஷம், என் வயித்துக்குள் அப்படியொரு உதை விழுந்தது’ எனப் பூரிக்கிறார் ஸ்ரீரஞ்சனி.

Tamil Behind Talkies AMP · Quick view
View full