அமிதாப் வீட்டுக்கு வாடகைக்கு சென்ற பரம சுந்தரி – அட்வான்ஸ் மற்றும் மாத வாடகை மட்டும் எத்தனை லட்சமம் தெரியுமா ?

0
553
kriti
- Advertisement -

இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் அமிதாபச்சன். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. அதோடு இவர் என்றென்றும் இந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆகவே திகழ்பவர் என்று சொல்லலாம். இந்நிலையில் இவர் பிரபல நடிகைக்கு வீடு வாடகைக்கு விட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அமிதாபச்சன் அவர்களுக்கு மும்பையில் பல்வேறு பகுதிகளில் சொந்த பங்களாக்கள் உள்ளன.

-விளம்பரம்-
For Amitabh Bachchan, Ballroom Dancing With Kriti Sanon Brought Back  "College Days"

இந்நிலையில் அந்தேரியின் மேற்கு பகுதியில் லோகண்ட் வாலா சாலையில் உள்ள அட்லாண்டிஸ் அடுக்குமாடி குடியிருப்பில் 27 மற்றும் 28வது மாடியில் டூப்ளக்ஸ் வீடு இவருக்கு இருக்கிறது. இந்த வீட்டை பிரபல ஹிந்தி நடிகை கீர்த்தி சனானுக்கு நடிகர் அமிதாப்பச்சன் வாடகைக்கு கொடுத்துள்ளார். மேலும், அமிதாப் பச்சன் வீட்டில் வாடகைக்கு இருக்க நடிகை கீர்த்தி சனான் இரண்டு வருடங்களுக்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறார். அதற்காக அட்வான்ஸ் தொகையை 60 லட்சமும், மாதம் வாடகை 10 லட்சம் வழங்க வேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் போடப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

இதற்கு நடிகை கீர்த்தி சனான் சம்மதித்து குடியேறி இருக்கிறார். நடிகை கீர்த்தி சனான் ஹிந்தியில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர். இவர் தில்வாலே, க்ளாங்க், பரேலி கி பார்ஃபி, ஹவுஸ்புல் போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக நேனொக்கடே என்ற படத்திலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த ” மிமி ” படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.

அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பரமசுந்தரி பாடல் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் நடிகர் அமிதாப்பச்சன் ஜூஹுவில் உள்ள தனது இடத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு வாடகை கொடுத்துள்ளாராம். அந்த இடத்திற்கு 15 வருடத்திற்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறாராம். இப்படி தன்னுடைய இடங்களை அமிதாப்பச்சன் வாடகைக்கு விட்டு அதன் மூலம் சம்பாதித்து வருகிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement