பாலா செய்யும் உதவி தொடர்பான சர்ச்சைகளுக்கு நடிகர் அமுதவாணன் கொடுத்து இருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அதற்க்காக இவர் இரவு பகலாக தன்னை தானே தயார் படுத்திக் கொண்டு இருந்தார். அந்த வகையில் இவருக்கு திருப்புமுனையாக இருந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி சமையலை மையப்படுத்தி இருப்பதாக இருந்தாலும் அதிலும் கோமாளிகள் காமெடிகள் தான் அந்த நிகழ்ச்சியை இந்த அளவிற்கு வளர்த்து விட்டது. இந்த நிகழ்ச்சியில் KPY பாலா செய்யும் காமெடிகளுக்கு அளவே கிடையாது. இதன் மூலம் தான் இவருக்கு படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் இவர் விக்ரம் பிரபுவின் புலிக்குட்டி பாண்டி, யோகி பாபு நடித்த Shoe, பாண்டி, விமர்சகரான ப்ளூ சட்டை மாறனின் ஆண்டி இந்தியன், நாய் சேகர் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
KPY பாலா:
தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்தும், பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார். மேலும், பாலா அவர்கள் நடிகர் மட்டுமில்லாமல், சமூக சேவை கொண்ட நபரும் ஆவார். இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். பின் இவர் மலைவாழ் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தந்து இருக்கிறார்.

சமூக சேவை செய்யும் பாலா:
அதே போல கடந்த ஆண்டு புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து இருந்தார். அதோடு பாலாவை குட்டி ராகவா லாரன்ஸ் என்று சொல்கிறார்கள். தற்போது லாரன்ஸ் நடத்தி வரும் மாற்றம் அறக்கட்டளையில் பாலா இணைந்து சேவை செய்து கொண்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, கே பி ஒய் பாலா உதவி செய்வதற்கு பலருமே, இவர் அரசியலில் நுழைவதற்கு தான் இப்படி எல்லாம் செய்கிறார், விளம்பரத்திற்காக செய்கிறான் என்றெல்லாம் கூறி இருந்தார்கள்.

பாலா அரசியல் குறித்த சர்ச்சை:
இதற்கு பாலா, எனக்கு போதிய அரசியல் அறிவு கிடையாது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அரசியலுக்கு அழைத்தாலும் நான் வரமாட்டேன். மற்றவர்களுக்கு நான் செய்யும் உதவிகள் என்னுடைய திருமணத்திற்கு பின்பும் தொடரும் என்றெல்லாம் பேசி இருந்தார். ஆனால், இதை பாலாவுக்கு தெரியாமல் இணையத்தில் பதிவிட்டு இருந்தார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடிகரும், பாலாவின் நண்பருமான அமுதவாணன் அளித்த பேட்டியில், பாலா இப்போது மட்டும் இல்லை எப்போதுமே என்னுடன் தான் இருக்கிறார்.
https://www.youtube.com/watch?v=hO-BSXKgCtE
அமுதவாணன் பேட்டி:
மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை ஒருவன் செய்யத் துணிந்து உதவி செய்வதை கிண்டல் செய்வது சரி இல்லை. பாலா விளம்பரத்திற்காக தான் உதவிகளை செய்கிறான் என்றெல்லாம் சொல்கிறீர்கள். அப்படி ஏன் சொல்லணும்? அரசியல்வாதி, முதல்வர், எம்எல்ஏக்கள் எல்லோருமே விளம்பரத்திற்காக கூட உதவியை செய்வதாக இருக்கட்டும். பணத்தை கொடுத்ததால் தானே உதவி செய்ய முடியும். அதுவும் காசு தானே. யாரையும் விமர்சிக்க தேவையில்லை. தேவையில்லாமல் ஒருவரை பற்றி குறை சொல்ல வேண்டாம் என்று பேசி இருக்கிறார்.






