விதவை தடையை உடைத்த ஜீ தமிழ் சீரியல் – எதிர் நீச்சல் தொடருக்கே டஃப் கொடுக்கும் சீரியல் காட்சி.

0
632
- Advertisement -

பொதுவாகவே சிரியல் என்றாலே அதற்கு அதிக வரவேற்பு ரசிகர்களின் மத்தியில் பல காலமாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் சன் டிவி, ஜீ டிவி, விஜய் சன் போன்ற தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சீரியல்களில் நடக்கும் நிகழ்வுகள் மக்களை எளிதாக சென்றடைகின்றன. ஆனால் சினிமாவை விட சீரியல்களில் அதிக பிற்போக்கு கருத்துகள், ஆணாதிக்கத்தை செலுத்துவதை ஹீரோயிஷமாக காட்டுவது. பெண்களுக்கு எதிரான கருத்துக்கள் என இருந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் தற்போதுதான் பிற்போக்கு கருத்துகளுக்கு எதிராக முற்போக்கு கருத்துக்களை சீரியல்களில் பேச தொடங்கியுள்ளன. அதே போல சினிமாவிலும் தற்போது முற்போதுக்கு கருத்துகள் பரப்பப்படுகின்றது. அந்த தற்போது தற்போது ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் அமுதாவும் அன்னலாட்சியிம் என்ற சீரியலில் ரசிகர்கள் பாராட்டும் வகையில் புரட்சிகரமான செயல் ஓன்று நடந்துள்ளது அந்த ப்ரோமோதான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் கடந்த ஜீலை நான்காம் தேதி தொடங்கப்பட்ட சீரியல் தான் அமுதாவும் அன்னலட்சிமியும் சீரியல். இந்த சீரியலில் கதாநாயகி அமுதாவாக பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையான கண்மணி மனோகரன் நடித்து வருகிறார். இவர் பாரதிகண்ணமா சீரியலில் நடித்து கொண்டிருக்கும்போது தனக்கு கதநாயகி கதாபாத்திரம் கிடைத்திருப்பதாக அந்த சீரியலில் இருந்து வெளியேறினார். மேலும் அன்னலட்சிமி கதாபாத்திரத்தில் ராஜேஸ்வரி நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த சீரியலில் கதையில் அன்னலட்சிமிக்கு மிகவும் விருப்பமான மருமகளாக அமுதா இருந்து வருகிறார். தான் படிக்காததினால் பட்ட கஷ்டங்களை தாங்கி வரும் அன்னலட்சிமியை அவரது மகன் தான் ஒரு மருத்துவர் என்று ஏமாற்றுகிறார். அதே பொய்யை சொல்லித்தான் அமுதாவையும் திருமணம் செய்கிறார். திருமணம் முடிந்த பிறகு உண்மை தெரிய வரவே செந்திலை எப்படியாவது ஆசிரியர் ஆக்கிவிட வேண்டும் என்று குறிக்கோளாக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் வீட்டில் மாங்கல்யம் மாற்று விழா நடைபெறுகிறது. இதில் அமுதாவின் மாமியார் விதவை என்பதினால் சுப காரியங்களில் பங்குபெற கூடாது என்று அமுதாவின் அண்ணிகள் கூறுகின்றனர். உடனே அமுதா விதவையாக இருந்தால் தாலியை வேண்டுமென்றால் கழட்டி விடுங்கள், அதற்காக நம்முடைய அம்மா சிறுவயது முதல் நமக்கு வைத்து அழகு பார்த்ததை ஏன் நீக்க வேண்டும் என்று கூறி அன்னலட்சிமிக்கு போட்டு வைக்கிறார் அமுதா.

இந்த ப்ரோமோ வைரலாகவே பாலரும் இது போன்று விழிப்புணர்வை கூறியதற்கு பாராட்டி வர மறுபுறம் இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் போன்று உள்ளது என பலரும் கலாய்த்து வருகின்றனர். இதே போன்றுதான் சமீபத்தில் இனியா சீரியலில் பெரியாரின் பெண் விடுதலை குறித்து பேசியிருந்தது பலராலும் வரவேற்கப்பட்டது. இந்த நிலையில் அமுதாவும் அண்ணலாட்சியிம் இந்த மாதிரியான ஒரு புரட்சிகரமான ப்ரோமோ வெளியான நிலையில் இந்த சீரியல் அதிக ரசிகர்களை பெரும் என்று கூறப்படுகிறது.

Advertisement