எமி ஜாக்சன் வருங்கால கணவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.!

0
336
Amy-Jackon

தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் வெளியான ‘மதராசப்பட்டிணம்’படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஹாலிவுட் மாடல் அழகியான நடிகை ஏமி ஜாக்சன்.அதன் பின்னர் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இவரது நடிப்பில் கடைசியாக 2.0 பிரம்மாண்ட படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். ஹாலிவுட்டில் பிரபலமான சூப்பர் கேர்ள் இணைய தொடரிலும் ஏமி நடித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவருக்கும் ஜார்ஜ் பனயோட்டு என்ற தொழிலதிபருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள். 

இதற்கிடையே ஏமி திருமணம் செய்யவிருக்கும் ஜார்ஜ் பனயோட்டுவின் சொந்து விவரம் வெளியாகி இருக்கிறது. அவரது மொத்த சொத்தின் மதிப்பு 400 மில்லியன் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு மேல்) என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.