ட்ரவ்சர் அணியாமல் மீட்டிங். இது தான் புது ட்ரெண்டாம்.எமி ஜாக்சன் பதிவிட்ட புகைப்படம்.

0
26139
amy
- Advertisement -

தற்போது இந்தியாவில் கொரானா வைரஸ் வேகமாக பரவி வருவதால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றார்கள். நாளுக்கு நாள் கொரோனாவின் ஆட்டத்தால் மக்கள் பீதி அடைந்து போய் உள்ளார்கள். கொரோனாவின் தாக்கத்தால் ஒரு சில பேர் தற்போது நடந்து கொண்டு இருப்பது கல்கி அவதாரம் என்றும் கூறி வருகிறார்கள். இது போரை விட மிக கொடுமையாக உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,000 நெருங்கியது. இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பிரதமர் மோடி அவர்கள் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.

-விளம்பரம்-
View this post on Instagram

Trouserless Tuesday. The new-age zoom meeting attire.

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

மேலும், தற்போது இந்த உத்தரவை மே 3 ஆம் தேதி வரை நீட்டித்து உள்ளார். இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்துகள், கடைகள், பொது இடங்கள் என அனைத்தும் தொடர்ந்து மூடப்பட்டு வருகிறது. ஏற்கனவே கம்பெனியில் வேலை செய்பவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே தங்களுடைய வேலைகளை செய்து வருகிறார்கள்.

- Advertisement -

ஊரடங்கு நீட்டித்து இருப்பதால் மீண்டும் அவர்களுடைய வேலையை வீட்டில் இருந்து செய்கிறார்கள். இந்த நிலையில் வீட்டில் இருந்து வேலை செய்வதால் நாம் முழு சுதந்திரமாக வேலை செய்யலாம். எந்த ஒரு அலங்காரமும், டென்ஷனும் இல்லாமல் வேலையை செய்யலாம். அப்படியே வீட்டையும் கவனித்து கொள்ளலாம்.

வீட்டிலிருந்து வேலை செய்தால் முதலாளிகள் போலவே வேலை செய்கிற எண்ணம் தோன்றும். இப்படி வேலை செய்யும் போது மனதிற்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். அந்த வகையில் நடிகை எமிஜாக்சன் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பயங்கர கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

அதில் அவர் மேலாடை மட்டும் அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் லேப்டாப்பில் பணியாற்றுவது போல் உள்ளது. தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலர் குழந்தை பெற்ற பிறகும் இந்த அளவிற்கு கவர்ச்சி தேவையா? என்று கேட்டு வருகிறார்கள். கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

மேலும், சினிமா பிரபலங்கள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை என பல பேர் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். தமிழ் சினிமா உலகில் மக்கள் மத்தியில் பரிச்சயமான நடிகைகளில் எமிஜாக்சனும் ஒருவர். இவர் இங்கிலாந்தை சேர்ந்தவர். இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் வடிவழகியும் ஆவார். 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளிவந்த மதராஸ்பட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து தாண்டவம்,ஐ, தங்கமகன், தெறி, எந்திரன்-2.0 உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தான் இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Advertisement