காதலனுடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன் ! வைரலாகும் புகைப்படம்

0
2493
amy-jackson
- Advertisement -

‘ஐ’ படத்தின் மூலம் தமிழகத்தில் பிரபலம் ஆனவர் நடிகர் ஏமி ஜாக்சன். இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர். தமிழ் படங்களில் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு பின்னர் பாலிவுட் பக்கம் சென்றார். அங்கும் ஒரு சில படங்களில் கிளாமராக நடித்துவிட்டு தற்போது ஹாலிவுட் பக்கம் தாவியுள்ளார் ஏமி.
Emi jacksonபடங்களில் பிசியாக உள்ளாரா என தெரியாது, ஆனால் இவர் எப்போதும் இன்ஸ்டாகிராமில் எப்போதும் பிஸியாக இருக்கும் ஒரு நடிகை ஆவார். தினமும் எப்படியாவது ஒரு போட்டோவை வெளியிட்டு விடுவார் ஏமி. அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய மாடலிங் காலம் முதல் தற்போது வரை உள்ள அனைத்து போட்டோக்களும் கொட்டிக்கிடக்கிறது.

லேட்டஸ்டாக ஒரு இளைஞரின் மீது தாவி அவர் மேல் அப்படியே விழுவது போல ஒரு போட்டோ போட்டிருக்கிறார் ஏமி. இந்த படம் தான் அவரது ரசிகர்களை காலி செய்துள்ளது. அது அவருடைய காதலனாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

- Advertisement -

இதற்கு முன்னர் பாலிவுட் படங்களில் நடித்த போது வாரிசு நடிகர் ஒருவருடன் காதலில் இருந்ததாக கிசு கிசுக்கள் பரவியது. தற்போது அதில் இருந்து பிரிந்து வந்து புதிய காதலனுடன் இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது. அதிலும் தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் அதனை உறுதி செய்வதை போல் உள்ளது.