ஆண்டி என்று கூப்பிட்டால் போலீசில் புகார் கொடுப்பேன் – விஜய் தேவர்கொண்டா ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த புஷ்பா பட நடிகை.

0
1019
anashuya
- Advertisement -

ஆன்ட்டி என்று கூப்பிட்டால் போலீசில் புகார் கொடுப்பேன் என்று பிரபல நடிகை அனுசுயா கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தை துவங்கியவர் அனுசுயா. பின் இவர் சாக்ஷி டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி இருந்தார். அதன் பின்பு இவர் பல டிவி நிகழ்கிகளில் தொகுப்பாளராகவும் இருந்தார்.

-விளம்பரம்-

இந்த பிரபலத்தினால் இவருக்கு சினிமாவில் டப்பிங் பேசும் வாய்ப்பு கிடைத்து இருந்தது. பின் இவர் வேதம், பைசா போன்ற பல படங்களில் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருந்தார். அதிலும் இவர் ஜபர்தஸ்த் எனும் நகைச்சுவை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அனுசுயா சினிமா வட்டாரங்களிலும் பிரபலமானார். அதன் பின் இவர் நாகார்ஜூனா நடிப்பில் வெளிவந்த சொக்கடே சின்னி நயனா என்னும் படத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

அனுசுயா திரைப்பயணம்:

அதைத்தொடர்ந்து சக்ஷணம் எனும் படத்தில் நெகடிவ் கதாபத்திரத்தில் நடித்திருந்தார் அனுசுயா. இப்படி இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த புஸ்பா படத்திலும் அனுசுயா நடித்து இருந்தார். இயக்குனர் சுகுமார் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உட்பட பலர் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார்.

புஸ்பா படம்:

ஆந்திரா பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட் அடித்தது. இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்து இருந்தது. இந்த படத்தில் அனுசுயா வில்லியாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

அனுசுயா நடித்த படம்:

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. அதிலும் அனுசியா நடித்து வருகிறார்.
இதனை அடுத்து விஜய் தேவர் கொண்ட நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘liger’. இந்த படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாதன் இயக்கி இருக்கிறார். இந்த படம் குத்து சண்டை போட்டியை மையமாக கொண்டு உருவாகி இருக்கிறது. இந்த படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன், அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

அனுசுயா விடுத்த எச்சரிக்கை:

இப்படி ஒரு நிலையில் இந்த படம் குறித்து நெகடிவ்வாக அனுஷியா மறைமுக பதிவு ஒன்றை போட்டு இருந்தார். இதனால் விஜய் தேவர்கொண்டா ரசிகர்கள் பலரும் இவரை Aunty என்று குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்து வந்தனர். இதனை பார்த்து அனுசியாவும் தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். இதனால் பொங்கி எழுந்த விஜய் தேவர் கொண்ட ரசிகர்கள் Aunty என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்டிங்கில் கொண்டு வந்தனர். இந்நிலையில் அனுசுயா, என்னை ஆண்டி என்று அழைத்தால் போலீசில் புகார் கொடுப்பேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது இவர் கூறியிருக்கும் கருத்து சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி வருகிறது.

Advertisement