திருமணத்துக்குப் பிறகு டி.வி-க்கு பிரேக் எடுத்துக்கொண்ட அஞ்சனா, கடந்த சில மாதங்களுக்கு முன் கர்ப்பமடைந்தார். தொடர்ந்து முறையான கர்ப்பகாலப் பரிசோதனைகளை எடுத்து வந்தவருக்கு, சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில், இரு தினங்களுக்கு முன் அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. 'நார்மல் டெலிவரி' என்பதால், தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்துவிட்டார். நலமுடன் இருக்கிற தாயையும் சேயையும் அஞ்சனா மற்றும் சந்திரன் குடும்பத்தினர் அருகில் இருந்து கவனித்துவருகிறார்கள். வாழ்த்துகள் அஞ்சனா.Yes, it’s a Kurumba ❤ @AnjanaVJ and I are blessed with a baby boy. And both are doing fine. Thank you so much for all the love showered on us❤
— Chandran (@moulistic) July 3, 2018





