அஞ்சனா ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தாங்க ? அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
3142
vj-anjana

சினிமா மற்றும் சின்னத்திரை நடிகைகளை தாண்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பளினிகளுக்கும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. பல தொகுப்பளினிகளுக்கு ரசிகர்கள் இருந்தாலும் ஒரு சிலருக்கு ரசிகர் கூட்டம் அதிகம்.

Anjana

அவர்களில் ஒருவர்தான் வி.ஜே அஞ்சனா. இவர் கடந்த பல வருடங்களாக சன் தொலைக்காட்சி மற்றும் சன் மியூசிக் ஆகிய டீவிகளில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் இருந்து தற்போது விலகுவதாக அறிவித்துள்ளார் அஞ்சனா. பர்சனல் ப்ரேக் வேண்டும் என கடந்த 10 வருடங்களாக தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சியில் இருந்து தற்போது விலகுவதாக அறிவித்துள்ளார் அஞ்சனா. மேலும், ரசிகர்கள் மற்றும் இதற்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அஞ்சனா.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நடிகர் கயல் சந்திரனுடன் திருமணம் செய்துகொண்டார் அஞ்சனா. மேலும், குடும்பத்துடன் நேரம் செலவிட இந்த முடிவினை எடுத்துள்ளதாக தெரிகிறது.