தொகுப்பாளினி பாவனாவின் உடை,உடலை கிண்டல் செய்த ரசிகர்கள்..? புகைப்படம் உள்ளே

0
1497
Bhavana Anchor
- Advertisement -

விஜய் டிவி யின் பிரபல தொகுப்பாளினி பாவனா ஒரு கால கட்டத்தில் விஜய் டிவியின் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் தொகுபாளினியாக இருந்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்”, “ஜோடி” போன்ற பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்து வந்தார். ஆனால் சில ஆண்டுகளாக இவரது செயல்பாடுகள் அடங்கிவிட்டது.

-விளம்பரம்-

- Advertisement -

ஆனால் சமீபத்தில் இவர் தனது உடல் இடையை குறைத்தாலும் குறைத்தார். அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களாக வாரி வழங்கி வருகிறார். மேலும் வித்யாசமான உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். மேலும் அவர் பதிவிடும் புகைப்படங்கள் ட்விட்டரில் ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட மீண்டும் ட்ரெண்டிங்கில் வந்து விட்டார்.

தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஐபிஎல் தொகுப்பாளினியாக இருந்து வரும் பாவனா சமீபத்தில் ஒரு வித்யாசமான உடையில் சென்றுள்ளார். அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை கண்ட மேனிக்கு கிண்டல் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

ஒரு சில ரசிகர்கள் பாவனாவின் இந்த புது வகையான ஆடையை பார்த்து, பார்ப்பதற்கு பார்பி டால் போல அழகாக இருக்கிறீர்கள் என்று கூறி அவருக்கு ஐஸ் வைத்து வந்தாலும் மேலும் சில ட்விட்டர் வாசிகளோ இது என்ன ஆடை வெள்ளை தார் பாய் போல உள்ளது என்று கிண்டல் செய்து வருகின்றனர்

Advertisement